டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரபேல் போர் விமானத்தை இயக்க இருக்கும் முதல் பெண் விமானி... 10ல் ஒருவர் தேர்வு!!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய விமானப்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ரபேல் போர் விமானத்தை இயக்குவதற்கு முதன் முறையாக பெண் விமானி ஒருவர் அமர்த்தப்பட இருக்கிறார். இந்திய விமானப்படையில் பணியாற்றி வரும் பத்து பெண் விமான ஓட்டிகளில் ஒருவர் அமர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விமானப் படையின் கோல்டன் ஏரோஸ் படைப்பிரிவில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி ரபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டன. இதையடுத்து இந்த விமானம் லடாக் மற்றும் லே பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை முன்னிட்டு பறந்து உளவு பார்த்து வருகின்றன.

 first woman will be inducted to fly the Rafale fighter soon

தற்போது இந்திய விமானப் படையில் ஐந்து ரபேல் போர் விமானங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 36 போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இன்னும் மீதமுள்ள ரபேல் விமானங்கள் வரும் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தியா வந்து சேரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களும் படையில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மிக் 21 போர் விமானங்களை ஓட்டுவதற்கு இந்திய விமானப் படையில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு போர் விமானத்தில் இருந்து மற்றொரு போர் விமானத்துக்கு மாறும்போது அவர்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது. அந்த வகையில், தற்போது இந்தியாவில் போர் விமானம் இயக்குவதற்கு பயிற்சி பெற்று இருக்கும் பத்து பேரில் ஒருவர் ரபேல் போர் விமானம் ஓட்டுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நாங்க ஆன்லைன் அரசியல் பண்றோமா.. அப்போ பாஜகவிடம் ஏன் பம்முறீங்க".. அமைச்சருக்கு திமுகவினர் சுளீர்!

தற்போது இந்த பத்து பெண் விமான ஓட்டிகளுக்கும் சு-30 எம்கேஐ மற்றும் மிக 29 யுபிஜி ஆகிய போர் விமானங்களை இயக்கத் தெரியும். பெண்கள் போர் விமானம் ஓட்டுவதற்கு கடந்த 2016ல் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ராஜதந்திர ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் அவ்வப்போது பெண்கள் விமான ஓட்டிகளாக விமானப் படையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்று மத்திய அரசு கடந்த வாரம் லோக் சபாவில் தெரிவித்து இருந்தது.

English summary
first woman will be inducted to fly the Rafale fighter soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X