டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெகட்டிவ் நிலைக்கு போகும் இந்திய பொருளாதாரம்.. ஃபிட்ச் ரேட்டிங்ஸ் போட்ட குண்டு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸின் உலகளாவிய பொருளாதார பாதிப்பு இடையே, இந்தியாவிலும், அதன் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று, உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings), தெரிவித்துள்ளது.

இதுவரை இந்தியா வளர்ச்சியற்ற நிலையில் பொருளாதார நிலையை கொண்டிருக்கும் என ஃபிட்ச் தெரிவித்த நிலையில் இப்போது, நெகட்டிவ் என அதை மாற்றியமைத்துள்ளது. அரசின் கடன் விகித அதிகரிப்பு இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் ஏற்கனவே, இந்திய பொருளாதாரம் நெகட்டிவ் நிலையை அடையும் என குறிப்பிட்ட நிலையில், இப்போது, ஃபிட்ச்சும் அப்படி தெரிவித்துள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு.. எவை செயல்படும், எவை செயல்படாது? சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு.. எவை செயல்படும், எவை செயல்படாது?

கடும் லாக்டவுன்

கடும் லாக்டவுன்

இந்தியாவின் நீண்டகால வெளிநாட்டு நாணய வழங்குநரின் நிலையான மதிப்பீடு (ஐடிஆர்) நிலையானதாக இருக்கும் என்று இதுவரை கூறி வந்த நிலை மாறி, அது எதிர்மறையாக மாறும் என மாற்றியமைத்துள்ளது ஃபிட்ச். மார்ச் 25 (FY21) முடிவடையும் நிதியாண்டில் பொருளாதார நடவடிக்கைகள் 5 சதவிகிதம் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மார்ச் 25 முதல் விதிக்கப்பட்ட கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகளின் எதிரொலியாக பார்க்கப்படுகிறது.

நிதித்துறை

நிதித்துறை

"கொரோனா வைரஸ் தொற்று இந்த ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை கணிசமாக பலவீனப்படுத்தியுள்ளது மற்றும் அதிக பொது-கடன் சுமையுடன் தொடர்புடைய சவால்களை அதிகரித்துவிட்டது" என்று ஃபிட்ச் குறிப்பிட்டது. கொரோனா நோய் பரவும் முன்பே, நிதித்துறை பலவீனமான நிலையில்தான் இருந்தது. வணிகம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை இழந்திருந்தது.

நிதி நிறுவன குளறுபடிகள்

நிதி நிறுவன குளறுபடிகள்

நிர்வாகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக நிதித்துறையை சேர்ந்த அதிகாரிகள் சிலர் வழக்குகளை சந்தித்தனர். ஆயினும்கூட, வங்கித் துறையின் செயல்படாத கடன் (என்.பி.எல்) விகிதம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 11.6 சதவீதமாக இருந்து, நடப்பு நிதியாண்டில் 9.0 சதவீதமாக முன்னேறியிருக்க வாய்ப்பு இருந்தது. அரசு நிதித்துறைக்கு கொடுத்த ஊக்கம் இதற்கு காரணம்.

கடன் அளவு அதிகம்

கடன் அளவு அதிகம்

வருவாயின் கடுமையான மந்தநிலை, நிதி பற்றாக்குறை மற்றும் பொதுத்துறை கடன் விகிதங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால், அரசின் செலவினங்கள் கட்டுப்படுத்தப்பட்டபோதும் நிதி அளவீடுகள் கணிசமாக மோசமடைந்துள்ளது. நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 71.0 சதவீதமாக இருந்த கடன் அளவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 84.5 சதவீதமாக உயரும் வாய்ப்பு உள்ளது என்று ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

English summary
Fitch Ratings on Thursday revised India’s outlook to ‘negative’ from ‘stable’, stating that the corona has significantly weakened the country’s growth prospects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X