டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டேட்டா பாதுகாப்பு மசோதா.. கூட்டு குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்.. கனிமொழி வெளியே,தயாநிதி மாறன் உள்ளே

Google Oneindia Tamil News

டெல்லி: டேட்டா பாதுகாப்பு மசோதா குறித்து அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். அதில், திமுகவில் இருந்து தயாநிதி மாறன் எம்பி இடம் பெற்றுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, அப்போதைய ஐடி அமைச்சர் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனிநபர் டேட்டா பாதுகாப்பு மசோதா - Personal Data Protection Billஐ மக்களவையில் அறிமுகம் செய்தார்.

இந்த மசோதா குறித்து அப்போதே பல எம்பிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து இந்த மசோதாவை ஆய்வுக்கு உட்படுத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.

 ராகுலின் பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்கும்.. ஒன்று திரளும் எதிர்க்கட்சிகளும்.. திகுதிகு டெல்லி ராகுலின் பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்கும்.. ஒன்று திரளும் எதிர்க்கட்சிகளும்.. திகுதிகு டெல்லி

நாடாளுமன்ற கூட்டு குழு

நாடாளுமன்ற கூட்டு குழு

இந்தக் குழுவில் மொத்தம் ஏழு எம்பிகள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, இந்த குழுவில் இடம் பெற்றிருந்த ஐந்து எம்பிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால் ஐந்து உறுப்பினர் பதவி காலியானது. மேலும் திமுக எம்பி கனிமொழி இந்தக் கூட்டுக் குழுவில் இருந்து விலகினார்.

தயாநிதி மாறன் எம்பி

தயாநிதி மாறன் எம்பி

அதேபோல மற்றொரு உறுப்பினரும் ஓய்வு பெற்றார். இந்நிலையில், இந்தக் குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜகவில் இருந்து 5 பேர், திமுக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் ஏழு புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக எம்பி தயாநிதி மாறன் இப்போது இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

புதிய தலைவர்

புதிய தலைவர்

சமாஜ்வாடி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் பேராசிரியர் ராம் கோபால் வர்மாவும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். மேலும், உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் தொகுதியின் எம்பி டாக்டர் சத்யபால் சிங், இந்தக் குழுவின் தலைவராகச் செயல்படுவார் என்றும் அறிவக்கப்ப்டடுள்ளது. இவர்களைத் தவிர மேலும் நான்கு பாஜக எம்பிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

89 திருத்தங்கள்

89 திருத்தங்கள்

இந்த குழுவின் தலைவராக இருந்த மீனாட்சி லேகி இப்போது வெளியுறவுத் துறை இணை அமைச்சராக உள்ளார். அவர் இந்தக் கூட்டத்தின் தலைவராக இருந்த போது இந்தக் குழு மொத்தம் 66 கூட்டங்களை நடத்தியது. அப்போது முதலில் முன்மொழியப்பட்ட மசோதாவில் 89 திருத்தங்களை மேற்கொண்டிருந்தது. இந்தக் குழு தனது அறிக்கையில் இறுதி செய்யும் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Replacements for vacant positions in the joint committee for data protection were announced in the Lok Sabha. Out of the seven replacements announced, five are from the ruling BJP party and one from DMK and Samajwadi Party each.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X