டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள்.. விடுவிக்க பெருசா ஏதாச்சும் பண்ணுங்க.. சுஷ்மா

Google Oneindia Tamil News

டெல்லி: நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஐந்து இந்திய கடற்படை மாலுமிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு மிகப்பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தி உள்ளார்.

பாக்யா ஸ்ரீதாஸ் என்ற பெண் பாஜக ஒடிசா மாநில துணை தலைவர் பாஜ்யாந்த் ஜே பாண்டே என்பவருக்கு அண்மையில் டுவிட்டரில் வேண்டுகோள் ஒன்று விடுத்து இருந்தார்.

 Five Indian sailors abducted by pirates in Nigeria, Sushma Swaraj seeks action highest level with Government of Nigeria for their release

அதில் "தனது கணவர் சுதீர் குமார் சௌத்ரி உள்பட ஐந்து இந்திய கடற்படை மாலுமிகள் எம்டி அபேகஸ் (IMO 733810) என்ற கப்பலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை நைஜீரியாவில் சில மர்ம நபர்கள் கடந்த 19.04.2019ம் தேதி கடத்தி சென்றுவிட்டனர். எனவே இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்து, எனது கணவர் உள்பட 5 பேரை மீட்க வேண்டும்" என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஐந்து இந்திய கடற்படை மாலுமிகள் கடத்தப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இந்த விஷயத்தில் வெளியுறவத்துறை அதிகாரிகள், நைஜீரியா அரசை தொடர்பு கொண்டு, உடனடியாக அதிகபட்ச நடவடிக்கை எடுத்து கடத்தப்பட்ட இந்திய மாலுமிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுதத வேண்டும் " என கூறி உள்ளார்.

தேர்தல் வெற்றிக்கு வழி என்ன?... அதிமுக ஐ.டி பிரிவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனைதேர்தல் வெற்றிக்கு வழி என்ன?... அதிமுக ஐ.டி பிரிவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

இதனிடையே நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில் நைஜீரியா கடற்படை மற்றும் போலீசுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோம். கடத்தப்பட்டவர்களுடன் ஆரம்ப கட்ட தொடர்பில் உள்ளோம். கடத்தப்பட்ட ஒவ்வொரு மாலுமியின் உயிரும் மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளது.

English summary
Sushma Swaraj tweet that i have seen news reports about abduction of five Indian sailors by pirates in Nigeria. I am asking Indian High Commissioner to take this up at the highest level with Government of Nigeria for their release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X