டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்.. சூப்பர் ஆண்டான 2019

Google Oneindia Tamil News

டெல்லி: நூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினைக்கு உச்சநீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தது. இதனால் இந்த 2019 ஆண்டு சூப்பர் ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும் போது முந்தைய ஆண்டை நாம் அசை போடுவது வழக்கம். முந்தைய ஆண்டில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள், குற்றங்கள், அரசியல் பேச்சுகள், கலக்கல் சினிமாக்கள், பாடல்கள், இந்திய அளவில் பிரபலமானவர்கள், உலக அளவில் பிரபலமானவர்கள் என நமக்கு சமூகவலைதளங்களும் மீடியாக்களும், செய்தித் தாள்களும் நினைவில் கொண்டு வரும்.

அந்த வகையில் 2019-ஆம் ஆண்டு அதிமுக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் என்றால் அது அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாகும்.

டிசம்பர் 6

டிசம்பர் 6

அயோத்தி பிரச்சினை, பாபர் மசூதி இடிப்பு, ராமர் ஜென்ம பூமி உள்ளிட்டவை 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகும். ஆண்டுதோறும் டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அன்று மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும்.

அமர்வு

அமர்வு

இத்தகைய சூழலில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் யாருக்கு என்பது தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வுதான் இந்த தீர்ப்பை வழங்கியது.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

அயோத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் மனுதாரர்கள் பிரித்து கொள்ள வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா விராஜ்மன் என்ற 3 பிரிவினரும் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

ஆதாரங்கள்

ஆதாரங்கள்

உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி தனது தீர்ப்பில் கூறுகையில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கொண்டாடும் நிர்மோகி அஹாரா என்ற அமைப்பு ஆதாரங்களை காட்டவில்லை. அவர்கள் தாக்கல் செய்த மனுவில் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை.

அமைப்பு

அமைப்பு

அந்த அமைப்பு வழிபாடு செய்வதற்கான எந்த அதிகாரத்தையும் பெற்றதாக தெரியவில்லை. ஆனால் இந்துக்கள் சர்ச்சைக்குரிய பகுதியில் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரம் இருக்கிறது. என்றாலும் அந்த அமைப்பு வழிபாடு தொடர்பாக உறுதியான தகவலை தரவில்லை.

ஆவணங்கள் இல்லை

ஆவணங்கள் இல்லை

1992-ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறிய செயலாகும். அதை ஒரு போதும் ஏற்க இயலாது. இது தொடர்பாக அலகாபாத் கோர்ட்டில் நடந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பும் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஏற்புடையது அல்ல. சர்ச்சைக்குரிய நிலத்தை 3 அமைப்புகளும் சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது தவறாகும். 3 அமைப்புகளும் முழுமையான ஆவணங்களை தரவில்லை.

நிர்மோகி அமைப்பின் மனு தள்ளுபடி

நிர்மோகி அமைப்பின் மனு தள்ளுபடி

சர்ச்சைக்குரிய நிலத்துக்கு சொந்தம் கொண்டாடிய நிர்மோகி அஹாரா அமைப்பு தேவையான ஆவணங்களை தரவில்லை. எனவே அந்த அமைப்பின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதற்கு பதில் ராம்லல்லா அமைப்பின் மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும் இஸ்லாமிய அமைப்புகளில் ஷியா அமைப்பின் கோரிக்கையை ஏற்க இயலாது. அந்த அமைப்பின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சன்னி வக்பு வாரியத்தின் மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ராமர் கோவில் கட்டலாம்

ராமர் கோவில் கட்டலாம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் மத்திய அரசுக்கு உரிமை உடையதாகும். அந்த நிலத்தின் உரிமையும், பராமரிப்பு உரிமையும் மத்திய அரசு வசமே இருக்கும். அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. மத்திய அரசு அதற்கு ஒரு அறக்கட்டளை உருவாக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராம ஜென்ம பூமி அமைப்பின் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும். ராமர் கோவில் கட்டுவதற்கான நிலத்தை ராம்லல்லா அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

அரை மணி நேரம் தீர்ப்பு

அரை மணி நேரம் தீர்ப்பு

முஸ்லிம்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ள மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். சன்னி வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கரில் அந்த மாற்று இடம் கொடுக்கப்பட வேண்டும் என்றார் ரஞ்சன் கோகாய். இந்த தீர்ப்பை சுமார் அரை மணி நேரம் வாசித்தார்.

முஸ்லீம் சமூகம்

முஸ்லீம் சமூகம்

ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதநம்பிக்கையை தடுப்பதாக இருக்க கூடாது. அமைதியை காக்கவும், பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் அயோத்தி தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஞ்சன் கோகாய் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அந்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்தாலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடந்தேறவில்லை என்பதற்கு 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்தது காரணமாக இருக்கலாம். 5 பேரில் ஒருவர் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Flashback 2019: SC pronounced verdict on 100 years old Ayodhya issue. It also gave permission to build Ram Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X