டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிர வைத்த பாலியல் புகார்.. பிளிப்கார்ட் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகினார் பின்னி பன்சால்!

பிளிப்கார்ட் சிஇஓ பொறுப்பில் இருந்து பின்னி பன்சால் திடீர் என்று விலகி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிளிப்கார்ட் சிஇஓ பொறுப்பில் இருந்து பின்னி பன்சால் திடீர் விலகல் !

    டெல்லி: பிளிப்கார்ட் சிஇஓ பொறுப்பில் இருந்து பின்னி பன்சால் திடீர் என்று விலகி உள்ளார்.

    பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு இது போதாத காலம் என்றுதான் கூறவேண்டும். இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் கிங்காக இருந்த அந்த நிறுவனம் தொடர்ச்சியாக சில விரும்ப தகாத மாற்றங்களை சந்தித்து வருகிறது.

    அந்த வகையில் அந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் தனது பதவியில் இருந்து விலகினார். தற்போது பாலியல் புகார் காரணமாக பிளிப்கார்ட் சிஇஓ பொறுப்பில் இருந்து பின்னி பன்சால் திடீர் என்று விலகி உள்ளார்.

    [அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் சென்னை பெண்.. டிரம்ப்பிற்கு எதிராக களமிறங்கும் தமிழ் வாரிசு!]

    வால்மார்ட் வாங்கியது

    வால்மார்ட் வாங்கியது

    பிளிப்கார்ட்டை சில மாதம் முன் வால்மார்ட் நிறுவனம் வாங்கியது. அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக இந்தியாவில் கடை திறக்கும் நோக்கத்தில் வால்மார்ட் நிறுவனம் இந்த முடிவை எடுத்தது. 1 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து பிளிப்கார்ட்டின் 77 சதவிகித பங்குகளை வாங்கியது.

    பிரச்சனை இருந்தது

    பிரச்சனை இருந்தது

    இந்த விற்பனை நடந்தவுடன் அந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் தனது பதவியில் இருந்து விலகினார். அதன்பின் கடந்த ஜனவரியில் பின்னி பன்சால் அந்த நிறுவனத்தின் சிஇஓவாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கும் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் நிறைய பிரச்சனை இருந்து வந்தது.

    வெளியேறி உள்ளார்

    வெளியேறி உள்ளார்

    தற்போது திடீர் திருப்பமாக பிளிப்கார்ட் சிஇஓ பொறுப்பில் இருந்து பின்னி பன்சால் திடீர் என்று விலகி உள்ளார். வால்மார்ட் நிறுவனம் இதற்கான ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இது பிளிப்கார்ட் ஊழியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    பாலியல் புகார் காரணமாக அவர் பதவி விலகி உள்ளார். ஆனால் என்ன மாதிரியான பாலியல் புகார், யார் கொடுத்தது என்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Flipkart CEO Binny Bansal resigns over sexual allegations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X