டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த தடுப்பூசியை முதலில் போடுங்க.. எந்த வைரஸும் கிட்ட நெருங்காது.. அட்வைஸ் தரும் டாக்டர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிரான கேடயமாக இருக்குமா என்பது உறுதி இல்லை என்றாலும் பருவகால காய்ச்சல்களான வைரஸ் காய்ச்சல் மற்றும் h1 n1
போன்ற பிற சுவாச வைரஸ் நோய்களுக்கு எதிராக வைரஸ் காய்ச்சல் தடுப்பூசி பாதுகாப்பை தரும். எனவே அனைத்து வயதினரும் இதை போட்டுக்கொள்ள வேண்டும்
என மருத்து வல்லுநர்கள் தெரிவித்தனர். கொரோனாவினால் ஏற்படும் நிமோனியா பாதிப்பை குறைக்கவும் காய்ச்சல் தடுப்பூசி உதவும் என்றும் கூறினார்கள்.

இன்ஃப்ளூயன்ஸா அல்லது வைரஸ் காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் வைரஸ் நோயாகும். இந்த நோய் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது. இருமல், காய்ச்சல், தொண்டை புண், சோர்வு, தசை வலி மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. காய்ச்சலின் சிக்கல்களுக்கு நிமோனியாவும் ஒன்று, சைனஸ் மற்றும் காதுகளில் பாதிப்பு ஏற்படுவது குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் பொதுவானவை.

இந்த காய்ச்சல் குறித்து, நிபுணர்கள் கூறுகையில், கோவிட்டுக்கு எதிராக பாதுகாப்பான கேடம் நம்மிடம் இல்லை. எனினும் காய்ச்சல தடுப்பூசியை பயன்படுத்தினால் கொரோனாவைப் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோய்கள் வராமல் தப்பிக்க முடியும் என்கிறார்கள்.

மூணாறு.. சோறு தண்ணி இல்லாமல் 5 நாளாக எஜமானரை தேடும் நாய்.. ஒவ்வொரு உடலையும் பார்த்து ஏமாறும் சோகம்மூணாறு.. சோறு தண்ணி இல்லாமல் 5 நாளாக எஜமானரை தேடும் நாய்.. ஒவ்வொரு உடலையும் பார்த்து ஏமாறும் சோகம்

தடுப்பூசி அவசியம்

தடுப்பூசி அவசியம்

மணிப்பால் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் சுதர்சன் பல்லால் இதுபற்றி கூறுகையில் "கோவிட் -19 தொற்று மற்ற சுவாச வைரஸ் நோய்களைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இன்புலுயன்சா போன்ற வைரஸ் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி என்பது நம் நாட்டில் பொதுவான நடைமுறையாகவோ பிரபலமாகவோ இல்லை. காய்ச்சல் வைரஸுக்கு எதிரான இந்த தடுப்பூசியை குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களில் கவனித்து பிரபலப்படுத்த வேண்டிய நேரம் இது.

ஆண்டு தோறும் மாறும்

ஆண்டு தோறும் மாறும்

வைரஸ் காய்ச்சல் தடுப்பூசிகள் - மேற்கத்திய நாடுகளில் மிகவும் பொதுவானவை. இவை வழக்கமாக மிக உயர்ந்த அளவிலான செயல்திறனைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் இது ஒவ்வொரு ஆண்டும் மாறிக்கொண்டே இருக்கும்.. காய்ச்சல் வைரஸ் அதன் மரபணுப் பொருளை மாற்றுவதால் புதிய மாற்றங்களின் படி தடுப்பூசியை ஆண்டுதோறும் எடுக்க வேண்டும். நோயிலிருந்து தொடர்ந்து பாதுகாப்பை வழங்க வைரஸின் புதிய விகாரங்களை குறிவைத்து
புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசி தேவைப்படுகிறது" என்றார்..

ரோட்டா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் முதல் உள்ளூர் தடுப்பூசி ரோட்டாவாக் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த மருத்துவ விஞ்ஞானி ககன்தீப் காங் வைரஸ் காய்ச்சல் தடுப்பூசி பற்றி கூறுகையில்,. "உலக சுகாதாரை அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்துகிறது. அங்கு வல்லுநர்கள் ஆண்டு முழுவதும் காணப்படும் வைரஸின் வடிவங்களின் அடிப்படையில் மூன்று முக்கியமான விகாரங்களை கணிக்கின்றனர். தடுப்பூசி உற்பத்தியாளர்கள் இந்த கணிப்புகளின் அடிப்படையில் தடுப்பூசிகளை தயாரிக்கத் தொடங்குகிறார்கள்." என்றார்.

இரண்டு வாரத்தில்

இரண்டு வாரத்தில்

அப்பல்லோ மருத்துவமனைகளின் மருத்துவ இயக்குநரும் மூத்த குழந்தை இரைப்பைக் குடலியல் நிபுணருமான அனுபம் சிபல், கூறுகையில் "புதிய தடுப்பூசி அடுத்த இரண்டு வாரங்களில் கிடைக்க வேண்டும். அதுவரை தடுப்பூசிக்காக காத்திருப்பதே விவேகமானதாக இருக்கும். பருவகால காய்ச்சல் வயதானவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும. வயதானவர்கள், ஏற்கனவே நீண்டகாலமாக நோய்களால் பாதிக்ககப்பட்டவர்கள் மற்றும் நீண்டகாலமாக நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களை இன்புளுயன்சாவில்இருந்து பாதுகாக்க மறந்துவிடக் கூடாது " என்கிறார்

இறப்பை குறைக்க உதவும்

இறப்பை குறைக்க உதவும்

மருத்துவ விஞ்ஞானி ககன்தீப் காங். கூறும் போது, "வைரஸின் செயல்பாடுகளை பொறுத்து ஒரு காய்ச்சல் தடுப்பூசியின் செயல்திறன் 20-70% வரை முன்னேற்றங்கள் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் காய்ச்சல் தடுப்பூசி முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் மருத்துவமனையில் நோயாளிகளாக மக்கள் அனுமதிக்கப்படுவதை தடுக்கவும், இறப்பை குறைக்கவும் உதவும். கடுமையான நிமோனியா மற்றும் பிற சுவாச நோய்களிலிருந்து ஒரு தடுப்பூசியைப் பயன்படுத்தி 30% பேர் மருத்துவமனையில் சேருவதைத் தடுக்கும் சூழ்நிலை இருந்தால், அதை நிச்சயம் நாம் செய்வோம் அல்லவா? காய்ச்சல் தடுப்பூசி கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற உதவும்" என்றார்.

இறப்பை குறைக்கும

இறப்பை குறைக்கும

மத்திய அரசு அன்லாக் -3 செயல்முறையை நாடு முழுவதும் தொடங்கி இருக்கிறது. நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகளவில் வெளியில் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்- எனவே காய்ச்சல் தடுப்பூசி இருந்தால் பருவகால வைரஸ் காய்ச்சல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸாவிற்கு எதிரான ஒரு பெரிய பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார்கள் மருத்து வல்லுனர்கள். ஏனெனில் சில ஆரம்ப ஆய்வுகளின் படி வைரஸ் காய்ச்சல் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதன் மூலம் கடுமையான கோவிட் -19 நோய்த்தொற்றால் ஒருவர் பாதிக்கப்படுவதை தடுக்கக்கூடும் என்கிறார்கள். பிரேசில் நடந்த ஆய்வில்
காய்ச்சல் தடுப்பூசிகள் கோவிட் இறப்பை குறைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

English summary
Not a Covid shield, a flu shot as a primary protection against other respiratory viral illnesses like common seasonal flu and H1N1
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X