• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பொருளாதாரத்தில் மீட்சி இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் பேட்டி

|
    Nirmala sitharaman press meet | தொழில் துறை உற்பத்தி அதிகரிக்கிறது- நிர்மலா சீதாராமன்

    டெல்லி: பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளச் சூழ்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வீட்டுவசதித் துறை சார்பில் சில புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக சரிவடைந்துள்ள சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சகம் பல்வேறு பொருளாதார ஊக்க, நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.

    கடந்த முறை செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கித் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியயிருந்தது. இந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன். அப்போது வீட்டுவசதி துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார்.

    Newest First Oldest First
    3:27 PM, 14 Sep
    இந்தியா ஆண்டுதோறும் மெகா ஷாப்பிங் விழாக்களை நடத்தும் மார்ச் 2020க்குள் முதலாவது மெகா ஷாப்பிங் திருவிழா நடக்கும்- நிர்மலா சீதாராமன்
    3:05 PM, 14 Sep
    சாதாரண குற்றங்களுக்காக, வரி செலுத்துவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது; 25 லட்சம் கீழ் மதிப்புள்ள நிதி முறைகேடுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர, கொலிஜீயம் அனுமதி தேவை; பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
    3:00 PM, 14 Sep
    நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது, எனவே விலைவாசி ஏறவில்லை தொழில்துறை உற்பத்தியின் மறுமலர்ச்சிக்கான தெளிவான அறிகுறி தெரிகிறது- நிர்மலா சீதாராமன்
    2:58 PM, 14 Sep
    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு துவக்கம் அவ்வப்போது வகுக்கப்படும் சில நடவடிக்கைகளை அறிவிக்க பிரஸ்மீட் நடத்துகிறோம்- நிர்மலா சீதாராமன்

    FM Nirmala Sitharaman Press Conference LIVE

    English summary
    finance minister nirmala sitharaman,nirmala sitharaman, finance minister sitharaman press conference, sitharaman press conference,sitharaman pc today,fm press conference today,sitharaman pc on economy,fm pc on economy,economic slowdown, economic slowdown in india, GST
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X