டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3வது காலாண்டில் இந்திய பொருளாதாரம் புதிய வலிமை பெறும்.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் 3வது காலாண்டில் மேலும் வலிமை பெறும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட நிதி பேக்கேஜ் அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டு வருகிறார்.கொரோனா காரணமாக இந்திய பொருளாதாரம் முடங்கி உள்ளது.

இந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பை கடந்த மே மாதம் வெளியிட்டார். இந்த நிலையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார்.

ஏற்கனவே கொரோனா வந்திருந்தால் மீண்டும் தாக்காது என நினைக்க வேண்டாம்.. பூனவல்லா ஷாக் வார்னிங் ஏற்கனவே கொரோனா வந்திருந்தால் மீண்டும் தாக்காது என நினைக்க வேண்டாம்.. பூனவல்லா ஷாக் வார்னிங்

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, 2020-21 மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டு வரும். இந்தியாவின் பொருளாதாரம் 3வது காலாண்டில் மேலும் வலுவாகும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

வலுவான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி நாம் செல்கிறோம்.பல்வேறு துறைகளில் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய உள்ளது.ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது.மார்க்கெட் தொடர்ந்து சீராக உயர்ந்து வருகிறது. பொருளாதாரம் மீள்வதற்கான அறிகுறிகள் தெரிகிறது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

நினைத்ததை விட பொருளாதார ரீதியாக இந்தியா பெரிய அளவில் மீண்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு 2வது காலாண்டில் பெரிய அளவில் சரியும் என்று ஆர்பிஐ மூலம் கணிக்கப்பட்ட நிலையில் 3வது காலாண்டில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தள்ளார்.

 டெக்னிக்கல் ரிஷசன்

டெக்னிக்கல் ரிஷசன்

2020-21 நிதி ஆண்டில் இந்தியா அதிகாரபூர்வமாக டெக்னிக்கல் ரிஷசன் எனப்படும் மாபெரும் பொருளாதார மந்தநிலையில் நுழைந்துள்ளது. இந்த காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி பொருளாதாரம் 8.6% சரிய வாய்ப்புள்ளது. கடந்த காலாண்டின் சரிவு 23.9% ஆக உள்ள நிலையில்.. இந்த காலாண்டில் இது மேலும் சரிய உள்ளது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

English summary
FM Nirmala Sitharaman to make some effective announcement one-second stimulas package.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X