டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் முறையாக.. மோடியை வென்ற ராகுல் காந்தி.. செம ஸ்டிரைக் ரேட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் முறையாக மோடியை நேரடியாக வென்ற ராகுல்-வீடியோ

    டெல்லி: முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை தனது செல்வாக்கால் வீழ்த்தியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

    நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜகவினர் எதிர்பாராதது என்று கூற முடியாது. அவர்களுக்குமே கூட முடிவு ஓரளவு தெரிந்திருக்கும். எனவேதான் ஏகப்பட்ட கடைசி நேர பஞ்சாயத்துக்களை பாஜக தரப்பு கூட்டிக் கொண்டிருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் முகாமுக்கு வெற்றி ஒரு பக்கம் குஷியைக் கொடுத்தாலும், மறுபக்கம் இன்னொரு சந்தோஷ சமாச்சாரமும் வந்து சேர்ந்திருக்கிறது. அதாவது ராகுல் காந்தி முதல் முறையாக பாஜகவின் முக்கிய மாநிலங்களில் மோடி செல்வாக்கை வீழ்த்தியுள்ளார். அதாவது ஸ்டிரைக் ரேட்டில் மோடியை முந்தியுள்ளார் ராகுல் காந்தி.

    செம அடி

    செம அடி

    ஸ்டிரைக் ரேட் என்பது, தேர்தலில் தலைவர்கள் பிரசாரம் செய்த தொகுதிகளும், அதில் அவர்களது கட்சி பெற்ற வெற்றியும் ஆகும். அதன்படி பார்த்தால் ராஜஸ்தானில் மோடி பிரசாரம் செய்த தொகுதிகளில் 50% அளவுக்குத்தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

    ராஜஸ்தானில் ஒரு அடி

    ராஜஸ்தானில் ஒரு அடி

    அதுவே ராகுல் காந்தி பிரசாரம் செய்த தொகுதிகளில் 52 சதவீத அளவுக்கு வெற்றி காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் மோடியை வென்றுள்ளது ராகுல் காந்தியின் செல்வாக்கு.

    ம.பியில் மறக்க முடியாத அடி

    ம.பியில் மறக்க முடியாத அடி

    மத்தியப் பிரசேதத்திலும் இதே நிலைதான். ஆனால் இங்கு மோடியின் செல்வாக்கு ரொம்பவே அடி வாங்கியுள்ளது. இங்கு வெற்றி விகிதம் மோடிக்கு 38% சதவீதமாகவும், ராகுல் காந்திக்கு 45 சதவீதமாகவும் உள்ளது.

    கசப்பான செய்தி

    கசப்பான செய்தி

    பாஜகவினருக்கு நிச்சயம் இது கசப்பான செய்தியாகும். காரணம் இதுவரை பப்பு என்றும் குட்டிப் பையன் என்றும் கிண்டலடித்து வந்த ராகுல் காந்தி முதல் முறையாக மாபெரும் ஜாம்பவானாக வலம் வந்த மோடியின் செல்வாக்கு, அதுவும் பாஜகவின் கோட்டையாக திகழ்ந்து வந்த ம.பியிலும், ராஜஸ்தானிலும் வீழ்த்தியிருப்பது சாதாரண விஷயமல்ல.

    English summary
    Congress President Rahul Gandhi has bettered PM Modi in the strike rate in Rajasthan and MP in the Assembly elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X