• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்கள்.. 2 வாரம் ஓட்டலில் குவாரண்டைன்.. செம்ம ஏற்பாடு

|

டெல்லி: வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் விஷயத்தில் இந்தியாவின் ஒவ்வாரு மாநிலமும் ஒவ்வொரு மாதிரியான திட்டங்களை செயல்படுத்த உள்ளன. அவற்றில் சில மாநிலங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

  Vande Bharat Mission : Govt will facilitate the return of Indian nationals stranded abroad

  துபாய், சவுதி அரேபியா, குவைத், கத்தார், பக்ரைன், மாலத்தீவு, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 12 வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக 64 விமானங்களை இயக்குவதாக இந்தியா அறிவித்தது. கடந்த மே 7ம் தேதி தொடங்கிய இந்த திட்டம் மே 13ம் தேதி செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 15000க்கும் மேற்பட்ட பயணிகள் அழைத்து வரப்பட உள்ளனர்.

  அடுத்த வாரத்தில் கர்நாடகாவிற்கு வரும் சுமார் 11,000 பயணிகள் ஓட்டல்களில் இரு வாரத்திற்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட உள்ளார்கள். இந்நிலையில் அவர்கள் பெங்களூருவில் உள்ள எந்த பட்ஜெட் ஹோட்டல்களிலும் இரண்டு வாரம் தங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ .16,800 அல்லது ஒரு நாளைக்கு ரூ .1,200 செலவு செய்ய வேண்டும். முடியாதவர்களுக்கு சில தனிமைப்படுத்தும் மையங்களை அரசே அமைத்துள்ளது. சமூக நலன், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத் துறைகளால் நடத்தப்படும் விடுதிகள் உள்ளன.. இது அரசாங்கத்தின் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டது.

  கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமானது தமிழகம்... இந்தியாவில் 3வது இடம்

  ஆரோக்யா சேது ஆப்

  ஆரோக்யா சேது ஆப்

  வெளிநாட்டில் இருந்து நாடு திரும்வுவோர் கட்டாயம் 3 ஆப்களை மொபைலில் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. Quarantine Watch', ‘Apthamitra' மற்றும் Arogya Setu ஆகிய ஆப்களை டவுன் லோடு செய்து வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 3மணிக்கு 350 பயணிகள் பெங்களூரு வருகிறார்கள். அவர்களை ஓட்டல்களில் தங்க வைக்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  நேராக முகாம்

  நேராக முகாம்

  ஆந்திர மாநிலத்திற்கு திங்கள்கிழமை (இன்று) முதல் முதலாக அமெரிக்வில் இருந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் விசாகப்பபட்டினம், விஜயவாடா மற்றும் திருப்பதி ஆகிய விமான நிலையங்கள் மூலம் வர உள்ளார்கள். அவர்கள் அனைவரையும் சிறப்பு வாகனங்கள் மூலம் நேரடியாக தனிமைப்படுத்தும் முகாமிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அனைவரும் ஆப் மூலமாக காண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

  2 பேருக்கு கொரோனா

  2 பேருக்கு கொரோனா

  இதற்கிடையே மார்ச் 7ம் தேதி அபுதாபி மற்றும் துபாயில் இருந்த கொச்சி மற்றும் கோழிக்கோடு வந்த இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கொச்சி மற்றும் கோழிக்கோட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 23930 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளார்கள். 334 பேர் ஐசலேசன் வார்டில் உள்ளார்கள்.

  ஓட்டல்கள் புக்கிங்

  ஓட்டல்கள் புக்கிங்

  வங்கதேசம், பிலப்பைன்ஸ், மலேசியா உள்பட பல்வேறு வெளிநாட்டில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு வர உள்ள 1900 பயணிகளுக்காக மும்பையில் உள்ள 88 ஹோட்டல்களில் 3343 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஓட்டல்கள் அனைத்த நட்சத்தி ஓட்டல்கள் ஆகும். ஒன்று முதல் 5 ஸ்டார் வரை உள்ள ஓட்டல்கள் ஆகும். தங்குபவர்களே கட்டணம் செலுத்த வேண்டும். இருவாரம் கட்டாயம் தனிமைப்படுத்துதலில் தங்கியிருக்க வேண்டும்.

  டெல்லி வந்த சவுதி விமானம்

  டெல்லி வந்த சவுதி விமானம்

  மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமானநிலையத்திலிருந்து 2 குழந்தைகள் உள்பட 179 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று இரவு கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் தனிமை மையங்களில் தங்க வைக்கப்பட்டார்கள். இதேபோல் சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமானநிலையத்திலிருந்து 139 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று இரவு டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கினர்.அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டனர் பின்னர் தனிமை மையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Foreign returnees to pay a bomb for hotel quarantine; Andhra Pradesh ready to receive first set of foreign returnees on Monday
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X