டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசியல்வாதியும் இல்லை..அஸ்ஸாம் பாஜக முதல்வர் வேட்பாளரும் இல்லை: முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

Google Oneindia Tamil News

டெல்லி: தாம் அரசியல்வாதியும் இல்லை; அஸ்ஸாம் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளரும் இல்லை என்று முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் முன்னாள் முதல்வரான கெசாப் சந்திர கோகாயின் மகன் ரஞ்சன் கோகாய். 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். வடகிழக்கு இந்தியாவில் இருந்து இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை ஏற்ற முதல் நபர் ரஞ்சன் கோகாய்.

அவர் தலைமை நீதிபதியாவதற்கு முன்னதாக 2018-ம் ஆண்டு ஜனவரி 12-ல் ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 4 நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக 4 மூத்த நீதிபதிகளும் கலகக் குரல் எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிலிர்க்க வைக்கும் பயணம்- மலையில் இருந்து 40 கிமீ தூரம்-காயம்பட்ட பெண்ணை சுமந்து வந்த ராணுவ வீரர்கள்சிலிர்க்க வைக்கும் பயணம்- மலையில் இருந்து 40 கிமீ தூரம்-காயம்பட்ட பெண்ணை சுமந்து வந்த ராணுவ வீரர்கள்

அஸ்ஸாம் முதல்வர் வேட்பாளர்?

அஸ்ஸாம் முதல்வர் வேட்பாளர்?

தாம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில், அயோத்தி வழக்கு, சபரிமலை வழக்கு ஆகியவற்றில் தீர்ப்பு வழங்கினார். ரஞ்சன் கோகாய் பதவி ஓய்வு பெற்ற பின்னர் ராஜ்யசபா நியமன எம்.பியாக்கப்பட்டார். இந்த நிலையில்தான் அடுத்த ஆண்டு நடைபெறும் அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ரஞ்சன் கோகாய் அறிவிக்கப்படலாம் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் தருண் கோகாய் கொளுத்திப் போட்டார். இது பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது.

ரஞ்சன் கோகாய் மறுப்பு

ரஞ்சன் கோகாய் மறுப்பு

ஆனால் தாம் அரசியல்வாதியும் இல்லை; பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளரும் இல்லை என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் ரஞ்சன் கோகாய். இது தொடர்பாக இந்தியா டுடேவுக்கு ரஞ்சன் கோகாய் அளித்த பேட்டியில், நான் அரசியல்வாதி இல்லை. என்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்கிற ஆசையும் இருந்தது இல்லை. என் பெயரை யாரும் அப்படி முன்மொழிந்ததாகவும் தெரியவில்லை என்றார்.

வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்க..

வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்க..

மேலும், ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி என்பது வேறு; ஒரு கட்சியின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுவது என்பது வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நியமன எம்.பி. என்ற அடிப்படையில் என்னுடைய கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க முடியும். அதற்காக நான் அரசியல்வாதியாகிவிட முடியுமா? என்றும் ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

அஸ்ஸாம் பாஜக பாய்ச்சல்

அஸ்ஸாம் பாஜக பாய்ச்சல்

ஏற்கனவே அஸ்ஸாம் மாநில பாஜகவும் கூட, தருண் கோகாய் கூறியதை கடுமையாக விமர்சித்திருந்தது. ரஞ்சன் கோகாயை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த பாஜக திட்டமிட்டிருப்பதாக தருண் கோகாய் கூறியிருப்பது அர்த்தமற்றது எனவும் சாடியிருந்தது. அஸ்ஸாம் பாஜக தலைவர் ரஞ்சித் குமார்தாஸ், தருண் கோகாய் போன்ற ஒரு முன்னாள் முதல்வரை நான் பார்த்ததே இல்லை என கொந்தளித்துப் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

English summary
Former Chief Justice of India Ranjan Gogoi has denied that the speculation that he will be BJP's CM candidate in next year Assam Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X