டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முழு அரசு மரியாதையுடன்... டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்

Google Oneindia Tamil News

டெல்லி: மாரடைப்பால் காலமான டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஷீலா தீட்சித் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் மாரடைப்பால் காலமானார். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஷீலா தீட்சித் உடலுக்கு, பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Former Delhi Chief Minister and Congress leader Sheila Dikshit was cremated with state honours

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், டெல்லி அரசு இரண்டுநாள் விடுமுறை விட்டுள்ளது. இன்று, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் வெளியறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், தீட்ஷித் உடல், அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அவரது உடல் , அலங்கரிக்கப்பட்ட, டெல்லி அரசுக்கு சொந்தமான வாகனத்தில், யமுனை நதி ஆற்றங்கரையோரத்தில் உள்ள நிகாம் போத் மயானத்திற்கு, ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.இந்த இறுதி ஊர்வலத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து, ஷீலா தீட்ஷித் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா, காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
Former Delhi Chief Minister and Congress leader Sheila Dikshit was cremated with state honours, today. UPA Chairperson Sonia Gandhi, Priyanka Gandhi Vadra & Robert Vadra at Nigambodh Ghat where last rites of former Delhi CM Sheila Dikshit were performed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X