டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் காலமானார்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சென்னையில் காலமானார்.

திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் அல்லது டி. என். சேஷன் என்று நாடு முழுக்க இவர் அறியப்பட்டார். இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இந்திய அரசின் பல்வேறு அரசுப் பொறுப்புக்களை வகித்து வந்தார்.

Former election commissioner TN Seshan passed away at 87

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற, கண்டிப்புடன் இருந்த தேர்தல் ஆணையர் என்று பெயர் பெற்றவர் டி.என்.சேஷன். 1990 முதல் 1996 வரை இந்தியாவின் 10-வது தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தவர் டி.என். சேஷன்.

இவர் தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்துவதில் எடுத்த முனைப்பான நடவடிக்கை இந்தியா முழுக்க பெரிய வரவேற்பை பெற்றது. டி.என்,சேஷன் தேர்தல் அதிகாரியாக இருந்த காலக்கட்டத்தில் தான் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. மிகவும் அதிரடியாக பல நடவடிக்கைகளை இவர் தேர்தல் ஆணையராக இருந்த போது எடுத்து இருக்கிறார்.

தேர்தல் ஆணையர் பதவி இல்லாமல், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறைஇயக்குநர் ஆகிய பதவிகளில் இவர் வகித்து இருக்கிறார். இவர் தேர்தல் ஆணையராக இருந்த போது மிகவும் கண்டிப்பான நபர் என்று பெயர் பெற்றார்.

இவர் எடுத்த சில நடவடிக்கைகள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளான போதிலும் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சீர்திருத்தங்களை செய்தார். இவர் தேர்தல் ஆணையராக ஆறு வருடம் இருந்தார். தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை முழுமையாகச் செயல்படுத்தத் தொடங்கியது அந்த ஆறு ஆண்டுகளில்தான்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்ற நிலையை இவர்தான் கொண்டு வந்தார். வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுகள் பற்றிய விவரங்களைத் தேர்தல் ஆணையத்துக்கு கொண்டு வந்தவரும் இவர்தான். வயோதிகம் காரணமாக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் டி.என்.சேஷன் காலமானார்.

இந்தியாவில் இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கண்டிப்பாக மக்கள் மத்தியில் நினைவில் இருப்பார். இவர் தேர்தல் ஆணையராக இருந்த போதுதான் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத் துறை செயலராக இருந்த நாடு முழுக்க இவர் பிரபலம் அடைந்தார். தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி அருகே பாதுகாப்புக்காகக் கூடுதல் பாதுகாப்புப் படைகளை இறக்கும் வழக்கத்தை இவர்தான் கொண்டு வந்தார்.

இவர் தேர்தல் ஆணையராக இருந்த போதுதான் தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்தது. தேர்தல் கண்காணிப்பு பணிகளை செய்ய 1,500 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து புதிய புரட்சி செய்தார்.

English summary
Former election commissioner TN Seshan passed away at 87 in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X