டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்!

Google Oneindia Tamil News

டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே வரி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 2005-இல் மாநிலங்களில் மதிப்பு கூட்டு வரி அமலுக்கு வந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் மத்திய கலால் வரி, வணிக வரி, மதிப்பு கூட்டு வரி, உணவு வரி, மத்திய விற்பனை வரி, ஆக்ட்ரோய், பொழுதுபோக்கு வரி, நுழைவு வரி, கொள்முதல் வரி, ஆடம்பர வரி, விளம்பர வரி ஆகியன இந்தியாவில் தனித்தனியே வசூலிக்கப்பட்டு வந்தது.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

இந்த நிலையில் ஒரே நாடு ஒரே வரி என்பதற்கு வித்திடும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கொண்டு மோடி தலைமையிலான அரசு முயற்சித்தது. இது பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய அரசு

மத்திய அரசு

இதையடுத்து நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒரே மாநிலத்திற்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி என வரி வசூலிக்கப்பட்டு அவை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் செல்லும்.

நிதி அமைச்சர்

நிதி அமைச்சர்

ஜிஎஸ்டி வரி விதிப்பினால் வருவாய் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வருவாய் பாதிப்பை மத்திய அரசு ஈடு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த வரியை மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி கொண்டு வந்தார்.

ஜிஎஸ்டி கவுன்சில்

ஜிஎஸ்டி கவுன்சில்

நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய போது எதிர்க்கட்சியினரின் பல்வேறு கேள்விகளுக்கு மிகவும் திறமையாக பதில் அளித்தார் ஜேட்லி. ஜிஎஸ்டி வரியை ஒழுங்குப்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஜேட்லி இருந்தார்.

English summary
Former Finance Minister Arun Jaitley introduced Goofd and Service Tax in the July 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X