டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது என்ன வகுப்புவாத மசோதாவா?.. அமித்ஷாவுக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் கண்டனம்

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை மசோதாவா இல்லை வகுப்புவாத மசோதா என கேட்டு மத்திய உள்துறை அமைச்சர் கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் எழுதிய கடிதத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

கர்நாடகத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வந்தநர் சசிகாந்த் செந்தில். இவர் ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த இவர் கடந்த செப்டம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் தற்போது குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு இவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். லோக்சபாவில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நாள், நவீன இந்திய வரலாற்றில் இருட்டு தினமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

தலைகுனிவு

தலைகுனிவு

அதோடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிடுகையில் நாட்டின் மதச்சார்பின்மை குறித்து முஸ்லீம்கள் மற்றும் ஆதிவாசி சகோதர, சகோதரிகளின் அச்சத்தை போக்கவில்லை என்பதை நினைத்து இந்த நாட்டின் சார்பில் வெட்கி தலைகுனிகிறேன்.

லோக்சபாவில் மசோதா

லோக்சபாவில் மசோதா

லோக்சபாவில் இந்த மசோதாவை தாக்கல் செய்ததன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிட்டது. என்ஆர்சி மசோதாவும் குடியுரிமை மசோதாவும் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆசிய பிரதேச பதிவு சட்டத்தை ஒத்ததாகும்.

இந்திய அரசு

இந்திய அரசு

எனது குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை நான் சமர்ப்பிக்க மாட்டேன். அது என்ஆர்சி மசோதாவையும் ஏற்கமாட்டேன். இதை கீழ்ப்படியாமை என நினைத்து இந்திய அரசு நடவடிக்கை எடுத்தால் அதை சந்திப்பேன்.

மகிழ்ச்சி

இதனால் நான் இந்த நாட்டின் குடிமகன் இல்லை என அறிவித்தாலும் நாடு முழுவதும் நீங்கள் கட்ட போகும் காவல் தடுப்பு மையங்களை நிரப்புவதில் மகிழ்ச்சி அடைவேன். என் சக மனிதர்கள் மீது வகுப்புவாத விவரக் குறிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை நான் வாயை மூடிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதை விட அதற்காக சிறைதண்டனை அனுபவிக்க தயார்.

அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

அரசியல் ஆதாயத்துக்கு பொதுமக்களை சிறுமைப்படுத்தும் இது போல் கடுமையான சட்டத்தை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் காந்தி என்ன செய்தாரோ அதைதான் ஒவ்வொரு இந்திய குடிமகனும் செய்ய வேண்டியதாயிருக்கும். இந்த செயல்திட்டத்தில் நீங்கள் வெற்றி காண்பதற்கு முன், காவல் தடுப்பு மையங்களை அதிகமாக உருவாக்குமாறு அறிவுறுத்துகிறேன் என கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Former DC of Dakshina Kannada District in Karnataka, Sashikanth Senthil strongly condemns Union Minister Amit Shah against Citizenship Amendment Bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X