டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மறுபடியும் ஏமாத்தாதீங்க.. ரயில்வே வேலை அறிவிப்பு குறித்து ப. சிதம்பரம் சுருக் கருத்து

Google Oneindia Tamil News

டெல்லி: ரயில்வே துறையில் அடுத்த 2 ஆண்டுகளில் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு, மத்திய அரசின் மற்றுமொரு ஏமாற்று வேலை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

ரயில்வேயில் அடுத்த 6 மாதங்களில் 1.31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளுக்குள்ளாக மேலும் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறி இருந்தார்.

Former minister p.chidambaram criticise announcement of four lakh jobs in railways,an another jumla

இந் நிலையில், முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் மத்திய அரசின் இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஒருபுறம், அரசுத் துறைகளில் அதிக அளவில் காலிப் பணியிடங்கள் உள்ளன.

மற்றொருபுறம், வேலைவாய்ப்பு இல்லாத அதிக இளைஞர்கள் உள்ளனர். இருந்தும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இந்த நிலைமை ரயில்வே துறையில் மட்டுமல்ல.. பல்வேறு அரசுத் துறைகளிலும் உள்ளது. ரயில்வேயில் 5 ஆண்டுகளாக 2,82, 976 பணியிடங்கள் காலியாக இருந்து வருகிறது.

ஆனால், தற்போது திடீரென விழித்துக் கொண்டுள்ள ரயில்வே துறை, அடுத்த 3 மாதங்களில் அந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறுகிறது. இது மத்திய அரசின் மற்றுமொரு ஏமாற்று வேலை என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

இந்திய ரயில்வேயில் மொத்தமாக 15,06,598 பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது அவைகளில் 12,23,622 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 2,82,976 பணியிடங்கள் காலியாக உள்ளன.

English summary
Former minister P.Chidambaram criticise central government announcement of four lakh jobs in Railways, calling it another jumla by the Modi government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X