டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூளை ரத்த கட்டிக்கு அறுவை சிகிச்சை.. கொரோனா பாதிப்பும் உறுதி.. வென்டிலேட்டரில் பிரணாப் முகர்ஜி

Google Oneindia Tamil News

டெல்லி: மூளை ரத்த கட்டிக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, செயற்கை சுவாச உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை

    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தற்போது வயது 84. முதுமை காரணமாக உடல் பலவீனமான நிலையில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில்தான், டெல்லியிலுள்ள, தனது வீட்டுக் கழிவறையில் அவர் வழுக்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது தலையில் அடிபட்டுள்ளது.

    லெபனான் பிரதமர் ராஜினாமா.. பெய்ரூட் வெடிப்பு மட்டுமா காரணம்? நோ சான்ஸ்.. மேட்டரே வேறு.. ரொம்ப மோசம் லெபனான் பிரதமர் ராஜினாமா.. பெய்ரூட் வெடிப்பு மட்டுமா காரணம்? நோ சான்ஸ்.. மேட்டரே வேறு.. ரொம்ப மோசம்

    பிரணாப் முகர்ஜி ட்வீட்

    பிரணாப் முகர்ஜி ட்வீட்

    உடனடியாக அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று பிரணாப் முகர்ஜி ட்விட்டர் கணக்கில் இருந்து ஒரு ட்வீட் வெளியிடப்பட்டது. அந்த ட்வீட்டில் கடந்த ஒரு வாரத்தில் தன்னுடன் பழகியவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில்தான் நேற்று பிரணாப் முகர்ஜியின் மூளையில் உறைந்திருந்த ரத்தத்தை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    வென்டிலேட்டர்

    வென்டிலேட்டர்

    இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு ஐசியூ பிரிவில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். கொரானா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் செயற்கை சுவாசத்தின் தேவை இருந்திருக்காது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல் மூப்பு, அறுவை சிகிச்சை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு போன்றவற்றின் காரணமாக பிரணாப் முகர்ஜி தீவிரமான ஓய்வில் இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

    ராஜ்நாத் சிங்

    ராஜ்நாத் சிங்

    இந்த நிலையில்தான் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று டெல்லியில் பிரணாப் முகர்ஜி சிகிச்சைபெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல் நலம் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார். சுமார் 20 நிமிடங்கள் ராஜ்நாத் சிங் அங்கு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    குணமடைய பிரார்த்தனை

    குணமடைய பிரார்த்தனை

    தற்போதுள்ள நிலவரப்படி, பிரணாப் முகர்ஜி ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Former President Pranab Mukherjee, who underwent surgery for blood clot in brain, has been admitted to the emergency department and with the help of ventilator. Former President Pranab Mukherjee is currently 84. He is in poor health due to old age. He reportedly slipped and fell in the bathroom of his home in Delhi. Then hit in the head.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X