டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முலாயம் சிங்கின் நிழல்.. மாஜி சமாஜ்வாடி தலைவர்.. எம்.பி. அமர்சிங் மறைந்தார்!

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜ்ய சபை எம்.பி அமர் சிங் 64 வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவர் சமாஜ் வாடி கட்சியில் அசைக்க முடியாத தலைவராக வலம் வந்தவர். இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

கடந்த 2013ல் அமர் சிங்கிற்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து துபாயில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மீண்டும் 2016ல் அரசியலுக்கு வந்தார்

Former Samajwadi leader Amar Singh had dies at the age of 64

சிங்கப்பூர் மருத்துவமனையில் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அமர் சிங், விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தி ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார். மேலும், ஈத் பெருநாளை ஒட்டி வாழ்த்தும் தெரிவித்து இருந்தார்.

மருத்துவமனை படுக்கையில் இருந்தவாறு, கடந்த மார்ச் 22ஆம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தார். டைகர் ஜிந்தா ஹை என்ற தலைப்பில் அந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதாவது புலி உயிரோடு இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார்.

சமாஜ்வாடி கட்சியை விட்டு வெளியேறி தனிக் கட்சி துவங்கிய அமர் சிங்கிற்கு தொடர்ந்து அரசியலில் சரிவுகள் ஏற்பட்டது. ஒரு காலத்தில் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு நெருங்கியவராக அமர் சிங் பார்க்கப்பட்டார். இனி எப்போதும் சமாஜ் வாடி கட்சிக்கு திரும்பப் போவதில்லை என்றும் சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார். 2010, ஜனவரி 6 ஆம் தேதி சமாஜ்வாடி கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்தும் அமர் சிங் ராஜினாமா செய்தார். இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இவருக்கு தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

English summary
Former Samajwadi leader Amar Singh had dies at the age of 64
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X