யாருமே சொல்லல.. உங்க விருது எனக்கு வேணாம்.. பத்மபூஷன் விருதை ஏற்க மறுத்த புத்ததேவ் பட்டாச்சார்யா
டெல்லி : மத்திய அரசு தனக்கு அளித்துள்ள பத்ம பூஷன் விருதை பெறப்போவதில்லை எனவும் அதனை திருப்பி அளிப்பதாக மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது.
தஞ்சை மாணவி தற்கொலை : பள்ளி நிர்வாகம் செய்த தவறுதான் காரணம்- அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை
இந்தாண்டு 128 பேருக்கு பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளதாகவும், அதில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருதும், பத்ம பூஷண் விருதுக்கு 17 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 107 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பத்ம விருதுகள் அறிவிப்பு
உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது வழங்கப்படும் எனவும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மேற்கு வங்காள் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது வேண்டாம்
இந்நிலையில் தனக்கு பத்ம பூஷண் விருது குறித்து தன்னிடம் யாரும் கூறவில்லை என்றும், ஆனால் தனக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், அதைத் துறப்பதாகவும் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை பத்ம விருது பெற்றவர்களின் பட்டியல் வெளியான நிலையில், பத்ம பூஷன் விருது பெற்றவர்களின் பட்டியலில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால், மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யா விருதை ஏற்க மறுத்துவிட்டார்.

முன்னாள் முதல்வர்
புத்ததேவ் பட்டாச்சாரியா தற்போது மிகவும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த போதும் அரசியலில் அவர் கடுமையான போக்கை கடைப் பிடிப்பவராகவும் பல நேரங்களில் மோடி அரசை கடுமையாக எதிர்த்தவர். காவி முகாமுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உயர்மட்ட அமைப்பிலும் அவர் பதவி வகித்து உள்ளதோடு மேற்குவங்கத்தில் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

விருதுகளுக்கானது அல்ல
இந்த நிலையில் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா இன்று புத்ததேவ் பட்டாச்சாரியாவை தொடர்பு கொண்டு அவருக்கு பத்மபூஷன் விருது அளிக்க உள்ளது குறித்து தெரிவிக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் அவரது மனைவி அழைப்பை எடுத்து தனது கணவர் விருதைப் பெற விரும்பவில்லை என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் விருதுகளுக்கு கட்சியின் கொள்கை என்றுமே எதிராக உள்ளது எனவும் எங்களது பணி மக்களுக்கானது மட்டுமே எனவும் விர்துகளுக்கானது அல்ல என கூறியுள்ளது. ஏற்கனவே, சிபிஐஎம் மாநிலங்களவை எம்பி பிகாஷ் பட்டாச்சார்யா எனக்குத் தெரிந்தவரை இந்த விருதை அவர் ஏற்கமாட்டார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.