டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் ஜெய்ஸ் இ முகமது இயக்க தீவிரவாதிகள் 4 பேர் ஊடுருவல்.. உச்ச கட்ட பரபரப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் 4 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தசரா பண்டிகை கொண்டாட்டம் நடந்து வரும் நிலையில் அதனை சீர்குலைக்கும் நோக்கில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

four Jaish-e-Mohammed Terrorists In Delhi, Warns security agencies

டெல்லியின் முக்கிய வணிக வளாகங்கள், சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

டெல்லி மாநகரம் முழுவதும் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.என்.எக்ஸ் வழக்கு: ஜாமீன் மனுவை நாளையே விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வலியுறுத்தல்ஐ.என்.எக்ஸ் வழக்கு: ஜாமீன் மனுவை நாளையே விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வலியுறுத்தல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அண்மையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அத்துடன் லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு பழிவாங்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கிடைத்துள்ளது. இதையடுத்தே பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
Four Jaish-e-Mohammed Terrorists In Delhi, they are planning to strike in Delhi during the festival season, Warns from security agencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X