டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி வன்முறை.. போலீஸ் பார்க்க நீதிமன்றம் ஒளிபரப்பிய பாஜக தலைவர்கள் 4 பேரின் வீடியோக்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஆத்திரமூட்டும் வெறுப்புகள் நிறைந்த பேச்சுக்களை பேசியதாக பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அனுராக் தாகூர் மற்றும் அபய் வர்மா ஆகியோருக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை கடுமையாக கண்டித்தது.

அப்போது பாஜக தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுக்களின் வீடியாக்களை பார்க்கவில்லை என்று டெல்லி போலீசார் கூறினார்கள்.

இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, டெல்லி காவல்துறை துணை போலீஸ் கமிஷனர், பல வழக்கறிஞர்கள் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரிடம் இந்த வீடியோக்களை பாருங்கள் என்ற நான்கு வீடியோக்களை நீதிமன்ற அறையில் திரையிட உத்தரவிட்டது.

வீடியோவை பாருங்க

வீடியோவை பாருங்க

அப்போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர். டெல்லி காவல்துறையின் நிலைப்பாட்டைக் கண்டு நான் வியப்படைகிறேன். உங்கள் கமிஷனர் அலுவலகத்தில் உங்களிடம் பல தொலைக்காட்சிகள் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறிவிட்டு "நீங்கள் அனைவரும் இங்கே இந்த வீடியோவை பாருங்கள் எனறு தெரிவித்தார். அத்துடன் நான்கு தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

3 நாள் கெடு

3 நாள் கெடு

அதன்படி நீதிமன்றத்தில் பாஜக தலைவர் மிஸ்ராவின் வீடியோ முதலில் ஒளிபரப்ப்பட்டது. அந்த வீடியோவில் , கபில் மிஸ்ரா ட்வீட் செய்தது காண்பிக்கப்பட்டது அதில் மிஸ்ரா "ஜஃப்ராபாத் மற்றும் சாந்த்பாக் சாலைகளில் குடியுரிமை திருத்த சடடத்திற்கு எதிராக போராடி வருபவர்களை டெல்லி போலீசார் மூன்று நாளில் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் அதன்பிறகு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்று கூறியிந்தார். அந்த டுவிட்டுன் இருந்த வீடியோவில், டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருக்கும் வரை நாங்கள் அமைதி காத்துக்கொள்வோம். அதன் பிறகு, சாலைகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க எதிரானவர்களை அப்புறப்படுத்தாவிட்டால், நாங்களே தெருவில் இறங்கி அடிப்போம் என்றார்,

பாஜக ஆட்சி

பாஜக ஆட்சி

மேற்கு டெல்லி பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மாவின் வீடியோ இரண்டாவதாக நீதிமன்றத்தில் காட்டப்பட்டது. அந்த வீடியோவில், டெல்லி தேர்தல் என்பது மிகச் சிறிய தேர்தல் அல்ல. இந்த தேசத்தின் ஒருமைப்பாட்டையும் நிலைத்தன்மையையும் வெளிப்படுத்துகிற தேர்தல். டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் ஒரு மணிநேரத்தில் ஷாகீன் பாக் பகுதியில் போராடுகிறவர்கள் ஒருவர் கூட அங்கே இருக்கமாட்டார்கள்.

பலாத்காரம் செய்வார்கள்

பலாத்காரம் செய்வார்கள்

டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் பிப்ரவரி 11-க்குப் பின்னர் ஒரே ஒரு மாதம் மட்டும் அவகாசம் கொடுங்கள்... என்னுடைய மேற்கு டெல்லி தொகுதியில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட அனைத்து மசூதிகளையும் அகற்றுவேன். டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். டெல்லி மக்கள் இப்போது ஒரு முடிவு எடுக்க வேண்டிய தருணம். சி.ஏ.ஏ. போராட்டக்காரர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்துவிடுவார்கள்.. உங்கள் சகோதரிகளை, குழந்தைகளை பலாத்காரம் செய்து கொலை செய்துவிடுவார்கள். இன்றே முடிவெடுங்கள்.. நாளை உங்களை காப்பாற்ற மோடியும் அமித்ஷாவும் வரமாட்டார்கள். இவ்வாறு பர்வேஷ் வர்மா பேசியிருந்தார்.

சுட்டுத்தள்ளுங்க

சுட்டுத்தள்ளுங்க

மூன்றாவதாக அனுராக் தாகூர் வீடியோ ஒளிபரப்பட்டது. அந்த வீடியோவில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், சி.ஏ.ஏ.வை எதிர்க்கும் தேசதுரோகிகளை சுட்டுத் தள்ள வேண்டும் என்றார்.. இதையே பிரசாரத்தின் போது முழக்கமாக எழுப்புமாறு பொதுமக்களையும் அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டார். டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்பு ரித்தலா தொகுதியில பாஜக வேட்பாளர் மணீஸ் சௌதரிக்கு ஆதரவாக பேசிய போது அனுராக் தாக்கூர் இப்படி பேசியிருந்தார்.

போலீஸை சுட்டவர்களை

போலீஸை சுட்டவர்களை

நீதிமன்றத்தில் கடைசியாக வெளிவந்த வீடியோவில் பாஜகவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ அபய் வர்மா இருந்தார. நேற்று ஆன்லைனில் வெளியான ஒரு புதிய வீடியோவில், பாஜக எம்எல்ஏ அபய் வர்மா ஆத்திரமூட்டும் கோஷங்களை முழக்கமிடுவதைக் கேட்கக்கூடிய ஒரு குழுவினரை வழிநடத்துகிறார். அவர்கள் போலீஸ்காரர்களைக் கொன்றவர்களைச் சுட்டுவிடுங்கள் என்று கோஷமிடுகிறார்கள். இவ்வாறாக வீடியா முடிந்தது. இந்த நான்கு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
delhi violence four video clips of provocative speeches by BJP leaders were played out in delhi highcourt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X