டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துணிந்தது பிரான்ஸ்.. UNSCல் நிரந்தர இடம்.. இந்தியாவிற்கு முழு ஆதரவு.. சீனா எதிர்பார்க்காத திருப்பம்!

Google Oneindia Tamil News

டெல்லி: சீனா கொஞ்சமும் எதிர்பார்க்காத விஷயம் ஒன்றை பிரான்ஸ் நாடு தற்போது செய்ய துணிந்து இருக்கிறது. இந்தியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்க ஆதரவு அளிப்போம் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இந்தியாவில் வெளியுறவுக் கொள்கை நாளுக்கு நாள் வலிமை அடைந்து கொண்டே செல்கிறது என்றுதான் கூற வேண்டும். அமெரிக்காவுடன் நெருக்கம், ஜப்பான் உடன் ராணுவம் ரீதியான ஒப்பந்தம், இஸ்ரேல் உடன் உடன்படிக்கை, ரஷ்யாவுடன் நட்பு என்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிக வலுவான ஒன்றாக உருவெடுத்துள்ளது.

சீனாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் உலக அளவில் இந்தியா முடிந்த அளவு நட்பு நாடுகளை சேகரிக்க பார்க்கிறது. பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளை தன் பக்கம் இழுக்க இந்தியா முயன்று வருகிறது.

சீனாவிடம் இழந்த நிலம்... மீட்கப்படுமா... கடவுளின் செயல் என விடப்படுமா.... ராகுல் கேள்வி!! சீனாவிடம் இழந்த நிலம்... மீட்கப்படுமா... கடவுளின் செயல் என விடப்படுமா.... ராகுல் கேள்வி!!

பிரான்ஸ் உடன் நட்பு

பிரான்ஸ் உடன் நட்பு

அதிலும் பிரான்ஸ் உடன் நீண்ட வருடமாக இந்தியா நெருக்கமான நட்பை கொண்டு உள்ளது. ரபேல் ஒப்பந்தம் காரணமாக இந்தியா - பிரான்ஸ் இடையிலான நட்பு இன்னும் விரிவடைந்து உள்ளது. ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் பிரான்ஸ் நிரந்தர உறுப்பு நாடாகும். இதனால் பிரான்சின் நட்பு இந்தியாவிற்கு முக்கியம்.அதேபோல் போர் வரும் பட்சத்தில் பிரான்சிடம் இருந்து வேகமாக இந்தியா ஆயுதங்கள், போர் கருவிகளை வாங்க முடியும்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்தியா - பிரான்ஸ் நட்பு மிகவும் நெருக்கம் அடைந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்க ஆதரவு அளிப்போம் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று இந்தியா வந்த பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்தியா - பிரான்ஸ் நட்பு என்பது கல்லை போல உறுதியானது.

மிகுந்த நெருக்கம்

மிகுந்த நெருக்கம்

பல வருடங்களாக நாங்கள் நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்கிறோம். இந்தியா எங்களுக்கு உதவி இருக்கிறது. கொரோனா காலத்தில் எங்களுக்கு தேவையான மருந்துகளை இந்தியாதான் வழங்கியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கை மற்றும் உறவு அளப்பரியது. ரபேல் விமானங்களை இந்தியா பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரான்ஸ் வாழ்த்து

பிரான்ஸ் வாழ்த்து

இந்தியா தற்போது தற்காலிக உறுப்பினாராக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இணைந்து உள்ளது. இந்தியாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள். ஆனால் இந்தியா ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ஆக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்தியாவின் இந்த கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். ஐநாவில் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர்வது மிக அவசியம், என்று பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சீனா அதிர்ச்சி

சீனா அதிர்ச்சி

இந்தியா ரபேல் விமானத்தை வாங்கியதை விட, பிரான்ஸ்சின் இந்த அறிவிப்புதான் சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமாக இணைவதை பிரான்ஸ் ஆதரிக்கும் என்று சீனா கொஞ்சம் கூட நினைக்கவில்லை. பிரான்ஸ் இப்படி அறிவிக்க துணியும் என்று சீனா நினைக்கவில்லை . இந்தியா, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதை சீனாதான் தடுத்து வருகிறது. தனது வீட்டோ அதிகாரம் மூலம் சீனாதான் இதை தடுத்து வருகிறது.

ஆனால் முடியாது

ஆனால் முடியாது

ஆனால் பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் பெரும்பான்மையான நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் தற்காலிக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளித்தால், இந்தியா எளிமையாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் ஆக முடியும். சீனாவின் வீட்டோ அப்போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த நிலையில்தான் இந்தியாவிற்கு பிரான்ஸ் ஆதரவு தருவது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமெரிக்கா ஆதரவு

அமெரிக்கா ஆதரவு

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமாக இணைவதை அமெரிக்கா பல வருடமாக ஆதரித்து வருகிறது . அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் வேட்பாளர் பைடன் இருவரும் இந்தியாவிற்கு இதில் தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளனர். ஐநா பாதுகாப்பு கவுன்சில் என்பது உலகின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு கவுன்சில் ஆகும். இந்த குழுவில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, யூகே , அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளது. மற்ற 10 நாடுகள் தற்காலிக உறுப்பினராக 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படும்.

Recommended Video

    India-வுக்கு ஆதரவு தரும் France | UNSC Permanent Seat For India | Oneindia Tamil
    இந்தியா இரண்டு வருடம்

    இந்தியா இரண்டு வருடம்

    இந்தியா தற்போது 2020 மற்றும் 2021கான தற்காலிக உறுப்பினராக தேர்வாகி உள்ளது. இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா, யூகே , ரஷ்யா ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் பிரான்சும் இப்போது ஆதரவு தெரிவித்துள்ளது. இன்னும் பல உறுப்பு நாடுகள் இந்தியாவிற்கு இதில் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு இதில் நிரந்தர உறுப்பினராக கிரீன் சிக்னல் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    France supports India to Grab a permanent seat at UNSC against China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X