டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி மெட்ரோ ரயில்- அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.. கெஜ்ரிவால்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்த நிலையில், டெல்லியில் மெட்ரோ ரயில், அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக செல்லலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டெல்லி மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. ஏழு இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது. அடுத்தஆண்டு டெல்லியில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.

Free travel for women in Delhi buses, metro, says Delhi Chief Minister Arvind Kejriwal

இந்நிலையில் கடந்த முறை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலுக்கு பின்னர் புதிய சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதன்படி டெல்லியில் உள்ள அரசு பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். இதன் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அணுகுமுறை முன்னேற்றம் அடையும். இந்த இலவச பயண அனுமதி திட்டத்துக்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்கப் போவதில்லை. ஏனெனில் டெல்லி மாநில அரசே இதற்கான நிதிச்சுமையை ஏற்றுக்கொள்ளும்.

நீங்க கர்ப்பமா இருக்கீங்களா.... திரு ஆனந்தியிடம் கேட்கிறான்...பாவம் அவ என்ன சொல்லுவா? நீங்க கர்ப்பமா இருக்கீங்களா.... திரு ஆனந்தியிடம் கேட்கிறான்...பாவம் அவ என்ன சொல்லுவா?

பெண்கள் இலவசமாக பயணிக்கும் இந்த புதிய திட்டம் 2 முதல் 3 மாதங்களுகக்கு சோதனை முறையில் அமல்படுத்தப்படு்ம்" என்றார். ஒருவேளை, இலவசத்தை விரும்பாத பெண்கள் கட்டணம் செலுத்த விரும்பினால், டிக்கெட் வாங்கியும் பயணிக்கலாம் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

English summary
Delhi Chief Minister Arvind Kejriwal says that Free travel for women in Delhi buses, metro for safety
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X