டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாக்குக்காக இலவசங்கள்.. மாநில நிதிநிலைமையை சீரழிக்கிறது.. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு!

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தலில் வாக்குகளுக்காக இலவசங்கள் வழங்கும் கலாச்சாரம், பல்வேறு மாநிலங்களின் நிதிநிலை மோசமடைந்து வருவதற்கு வழிவகுத்துள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    இலவசத் திட்டங்களுக்கு தடையா
    Freebie Culture Deteriorating Financial Health Of States Says vice President Venkaiah Naidu in Delhi

    நாட்டின் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இதனைத்தொடர்ந்து ஜெகதீப் தன்கர் நாளை பதவி ஏற்கவுள்ளார்.

    இந்த நிலையில் டெல்லியில், 2018 மற்றும் 2019-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய செய்தி தொடர்பு அதிகாரிகள் கூட்டத்தில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசினார். இதில் வெங்கையா நாயுடு பேசுகையில், அரசுக்கும், மக்களுக்கும் இடையே செய்தி தொடர்பு அதிகாரிகள் பாலமாக இருக்க வேண்டும். அரசின் கொள்கைகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து மக்களுக்கு அவரவர் தாய்மொழியில் உடனுக்குடன் செய்தி போய்ச்சேர வேண்டும்.

    ஆட்டத்தை கலைத்து ஆடிய நிதிஷ்குமார்.. முதல்வராக இன்று மாலை பதவியேற்பு.. துணை முதல்வராகிறார் தேஜஸ்விஆட்டத்தை கலைத்து ஆடிய நிதிஷ்குமார்.. முதல்வராக இன்று மாலை பதவியேற்பு.. துணை முதல்வராகிறார் தேஜஸ்வி

    அதுபோல், மக்களின் எதிர்பார்ப்புகளையும், உணர்வுகளையும் அரசுக்கு உடனுக்குடன் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் தான். அதன் நடுநிலைமை, புறநிலை மற்றும் நேர்மை ஆகியவை இந்தியாவின் ஜனநாயகம் உயிருடன் இருப்பதற்கு முக்கியமானதான இருக்கிறது. சமூக வலைத்தளங்களின் பெருக்கத்தால், உடனடி இதழியல் என்ற போக்கு அதிகரித்து வருகிறது. இதனால், இதழியல் தர்மம் அழிந்து வருவது கவலைக்குரியது.

    வாக்குகள் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவசங்களை அளித்து வருகின்றன. இந்த இலவச கலாசாரம், மாநிலங்களின் நிதிநிலைமையை சீரழித்துவிடும். ஏழைகளுக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் அரசு நிச்சயம் உதவ வேண்டும். அதே சமயத்தில், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இயற்கையை நாம் நேசித்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும்.

    சாதாரண விவசாயி மகனாக இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய பதவிக்கு தான் வந்ததற்கு எனது கடின உழைப்பு, ஒரே மனநிலை கொண்ட அர்ப்பணிப்பு உணர்வு, தொடர் பயணம், மக்களுடன் உரையாடல் ஆகியவைதான் காரணம். நான் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடியதால் அதிகம் கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்தார்.

    English summary
    Outgoing Vice President of India M Venkaiah Naidu on Tuesday said the freebie culture has led to the deteriorating financial health of many states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X