டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி விமான பயணம் எப்படி இருக்கும்: உள்நாட்டு விமான சேவைகளுக்கான வழிமுறைகள் வெளியீடு

Google Oneindia Tamil News

டெல்லி: மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை துவங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பயணிகளுக்கான வழக்கமான நடைமுறையில் பாதுகாப்பு கருதி சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்களை இப்போது பார்ப்போம்.

Recommended Video

    Domestic Flight Travel Rules In India

    கொரோனா ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் சரியாக 2மாதங்களுக்கு பிறகு மீண்டும் துவங்க உள்ளது.

    from may 25th flights resume: domestic flight travel rules in india due to covid 19

    மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இதுபற்றி கூறுகையில், ''நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை மே 25ம் தேதி முதல் துவங்கும். ஆனால் படிப்படியாகத்தான் இந்த சேவை துவக்கப்படும். பயணிகளுக்கான நெறிமுறைகள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் தனியாக வெளியிடப்படும்" என்றார்.

    இனி விமான பயணத்தில் பயணிகளுக்கான வழக்கமான நடைமுறையில் சில பாதுகாப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:

    • ஆரோக்கிய சேது ஆப்பை மொபைலில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    • டாக்ஸிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.
    • பேக்கேஜ் டேக் பெற்று, பயணியே தனது லக்கேஜில் ஒட்டி கன்வேயர் பெல்டில் வைக்க வேண்டும்.
    • ஐடி கார்டு, டிக்கெட்களை கையில் வாங்காமல் மிஷின் மூலம் அதிகாரிகள் ஸ்கேன் செய்வார்கள்.
    • ஒரு வேளை பேக்கேஜ் டேக்கை பிரிண்ட் அவுட் எடுக்க முடியாத பட்சத்தில் பயணியே கட்டாயம் அவரவர் பையில் பெரிய பேப்பரில் பிஎன்ஆர் நம்பரை டேக் செய்து விட வேண்டும்.
    • பயணி தனது அடையா அட்டையை ஒப்பிட்டு பார்க்க, முக கவசத்தை கழற்றி காண்பித்து விட்டு, மீண்டும் அணிய வேண்டும். உறுதி செய்ததும், பாதுகாப்பு படைவீரர் பயணியை அனுமதிப்பார்.

    சடலத்தில் கொரோனா வைரஸ் வாழும் நேரம்... இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட புதிய தகவல்சடலத்தில் கொரோனா வைரஸ் வாழும் நேரம்... இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட புதிய தகவல்

    • பயணிகள் தாமதமாக விமான நிலையம் வருவதற்கு அனுமதி இல்லை.
    • கண்டெய்ண்மெண்ட் பகுதியில் வசிப்பவர்கள் என்றால் விமானத்தில் பறக்க அனுமதி இல்லை.
    • கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதி இல்லை.
    • விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்
    • விமானத்தில் ஏறுவதற்கான விதிமுறைகள் நிறைவடை குறைந்தத ஒரு மணி நேரம் ஆகும்.
    • விமானத்தில் உணவு சேவை இல்லை. தண்ணீர் பாட்டில் மட்டுமே வழங்கப்படும்..
    • பயணிகள் பயண நேரத்திற்கு 2 மணி நேரம் முன்பாகவே விமான நிலையம் வந்தடைய வேண்டும்*
    • ஆரோக்கிய சேது பயன்பாடு 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமில்லை.

    English summary
    domestic flight travel rules in india due to covid 19 , new guidlince may released by aviation ministry
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X