டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று முதல் 76 ரூபாய் அதிகம்! மானியம் இல்லாத வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை!

Google Oneindia Tamil News

டெல்லி: மானியம் இல்லாத வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை (14.2 கிலோ) நவம்பர் 1ம் தேதி முதல் (இன்று முதல்) 76 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் வாங்கும் ஒவ்வொரு சிலிண்டரையும் நாம் சந்தையில் என்ன விலையில் விற்கப்படுகிறதோ அந்த விலையில் தான் வாங்க வேண்டும்.

From Today, Non-subsidised LPG or cooking gas prices increased

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மானியம் இல்லாத வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை (14.2 கிலோ) படிப்படியாக உயர்ந்து வருகிறது.

சென்னையில் கடந்த அக்டோபர் 1ம் தேதி 620 ரூபாய்க்கு விற்கப்பட்ட மானியம் இல்லாத சமையல் எரியாவு சிலிண்டர் விலை (14.2 கிலோ) ரூ.620 ஆக இருந்தது. இப்போது நவம்பர் 1ம் தேதி ரூ.76.50 காசுகள் உயர்ந்து ரூ.696க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் 605 ரூபாய் என்று இருந்த சமையல் எரியாவு சிலிண்டர் விலை (14.2 கிலோ) விலை 681.50காசுகளாக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் 706 ரூபாய் ஆகவும், மும்பையில் 651 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது.

English summary
Non-subsidised LPG or cooking gas prices were increased with effect from November 1, 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X