டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க போறோம்.. சொல்வது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Google Oneindia Tamil News

டெல்லி:பெட்ரோல், டீசல் விலைகள் அடுத்து வரக்கூடிய நாட்களில் குறையும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலும் சர்வதேச சந்தையை சார்ந்தே உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் நிர்ணிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

Fuel prices to come down further says minister dharmendra pradhan

இன்று டெல்லியில் பெட்ரோல் விலை ரூ. 68.65 மற்றும் டீசல் விலை ரூ. 62.66 ஆக உள்ளது. அதேபோல சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 71.22 மற்றும் டீசல் விலை ரூ. 66.14 என்ற விலையில் விற்கப்படுகிறது.
தற்போது பெட்ரோல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது. எனவே, அடுத்த சில நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பேசிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் கொண்டு வர முடியும்.

எண்ணெய் சுத்திகரிப்பை அதிகரிப்பதன் மூலம், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தாலும், அதன் தாக்கம் இந்தியாவில் ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம் என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.

English summary
Fuel prices in the country will be reduced further said Union Petroleum Minister Dharmendra Pradhan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X