டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேக்சின் காப்புரிமை ரத்து.. ஒரே உலகம் ஒரே சுகாதாரம்.. ஜி7 மாநாட்டில் மோடி முக்கிய கோரிக்கை.. பின்னணி

Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச அளவில் கொரோனா வேக்சின் மூலப்பொருட்களுக்கான காப்புரிமை ரத்து செய்ய வேண்டும், என்று பிரதமர் மோடி ஜி 7 மாநாட்டில் நடந்த ஆன்லைன் கருத்தரங்கில் பேசினார்.

ஜி7 நாடுகள் என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இதாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். இதில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு பிரிட்டன் அழைப்பு விடுத்து இருந்தது. முதலில் பிரதமர் மோடி இந்த ஆலோசனை கூட்டத்திற்காக பிரிட்டன் கார்ன்வால் செல்வதாக இருந்தது.

இ-பதிவு செல்லாது.. தமிழ்நாட்டின் இந்த 5 பகுதிகளுக்கும் பயணிக்க இ-பாஸ் கட்டாயம்.. கவனம் மக்களே!இ-பதிவு செல்லாது.. தமிழ்நாட்டின் இந்த 5 பகுதிகளுக்கும் பயணிக்க இ-பாஸ் கட்டாயம்.. கவனம் மக்களே!

ஆனால் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்த நிலையில், பிரதமர் மோடி பயணத்தை ரத்து செய்துவிட்டு, ஆன்லைன் மூலம் கலந்து கொள்வதாக அறிவித்தார். இந்த நிலையில் நேற்று இரவு 'Building Back Stronger - Health' என்ற தலைப்பில் பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் பேசினார்.

மோடி

மோடி

பிரதமர் மோடி தனது பேச்சில், சர்வதேச அளவில் கொரோனா வேக்சின் மூலப்பொருட்களுக்கான காப்புரிமை ரத்து செய்ய வேண்டும்,. வேக்சின் மூலப்பபொருட்கள், கொரோனா தடுப்பு மருந்துகளின் மூலப்பொருட்களை இருக்கும் காப்புரிமையை ரத்து செய்வதன் மூலம் வேக்சின் உற்பத்தியை பரவலாக்க முடியும். இந்தியா போன்ற நாடுகளில் வேக்சின் உற்பத்தியை மேற்கொள்ள இது வசதியாக இருக்கும்.

உலகம்

உலகம்

உலக நாடுகளுக்கு எளிதாக வேக்சின் ஏற்றுமதி செய்ய முடியும். இந்திய ஒருங்கிணைந்த சமூகமாக கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்டது. அரசு, தொழிற்கூடங்கள், பொது மக்கள் என்று எல்லோரும் இணைந்து கொரோனாவிற்கு எதிராக செயலாற்றினார்கள். கொரோனா தடுப்பு பணிகளில் இந்தியா பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தியது.

ஒரே உலகம் ஒரே சுகாதாரம்

ஒரே உலகம் ஒரே சுகாதாரம்

இந்தியா தனது அனுபவங்களை, தொழில்நுட்பங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும். ஒரே உலகம் ஒரே சுகாதாரம் திட்டத்தை நாம் கொண்டு வர வேண்டும். சுகாதாரத்தில் உலக நாடுகள் ஒன்றாக கரம் கோர்க்க வேண்டும். உலக நாடுகள், தலைவர்கள், நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து கொரோனா பரவல் மற்றும் எதிர்காலத்தில் வரும் பெருந்தொற்றுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Recommended Video

    அந்த காலம் மலையேறி போய்ச்சு! G7 மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்த China | Oneindia Tamil
    எப்படி?

    எப்படி?

    பிரதமர் மோடியின் இந்த அழைப்பிற்கு ஆஸ்திரேலியா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது. வேக்சின் மூலப்பொருள் உற்பத்தி மீதான காப்புரிமையை ரத்து செய்யும் கோரிக்கைக்கு இவர்கள் ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே வேக்சின் காப்புரிமை ரத்து விஷயத்தில் இந்தியாவிற்கு பல நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.

     ஆதரவு

    ஆதரவு

    இந்த கோரிக்கையை இந்தியாவை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவும் உலக வர்த்தக மையத்தில் வைத்தது. இந்தியாவின் வேக்சின் காப்புரிமை ரத்து கோரிக்கையை தென்னாப்பிரிக்கா, பொலிவியா, எகிப்து, பிஜி, இந்தோனேசியா, கென்யா, மாலைதீவு, மங்கோலியா, நாம்பியா, பாகிஸ்தான், வெனிசுலா போன்ற நாடுகளும் இதே கோரிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளன.

    English summary
    G7 Summit: PM Modi calls for One World One health and patent lift for Covid Vaccine in his online session.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X