டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி கோடீஸ்வர வேட்பாளர்களிலேயே முதலிடம் யார் தெரியுமா?.. பாஜக கம்பீர்தான்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பாஜக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள பணக்கார வேட்பாளர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் முதலிடம் பிடித்துள்ளார்.

ஏற்கனவே கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவும் அவரது மனைவியும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீரும் பாஜக வேட்பாளாராக டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளாராக களமிறங்குகிறார்.

Gambhir tops among millionaire candidates

மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக பிரம்மபிரயத்தனம் செய்து வருகிறது. அதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகையான வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி இருந்தது. ஆனால் இம்முறை 7 தொகுதிகளையும் கைப்பற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பதை பாஜக புரிந்து வைத்துள்ளது.

மோடி பிரதமர் இல்லையாம்.. புதிதாக ஒரு பெயர் சூட்டிய பிரியங்கா காந்தி!மோடி பிரதமர் இல்லையாம்.. புதிதாக ஒரு பெயர் சூட்டிய பிரியங்கா காந்தி!

டெல்லியில் இம்முறை ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நடக்கவுள்ளது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியை சமாளிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது சில பிரபலங்களை நிறுத்தினால் டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசை சமாளிக்க முடியும் இதனால் கிழக்கு டெல்லி தொகுதியில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரை பாஜக களம் இறக்கியுள்ளது.

Gambhir tops among millionaire candidates

கவுதம் கம்பீர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். அதன் பிறகு அரசியல் மற்றும் பொது விசயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தனது கருத்தை பதிந்து வருகிறார். கடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் அமித்சரசில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் அருன்ஜெட்லிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட கம்பீர் ஆம் ஆத்மி கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட கம்பீர் ஆம் ஆத்மியின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மிக மோசமான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட்டில் இருந்து 2016 ம் ஆண்டு கழட்டி விடப்பட்டார். அதன் பின்னர் உள்ளூர் போட்டிகளிலும், வர்ணனையும் செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில்தான் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Gambhir tops among millionaire candidates

டெல்லியில் பல பிரபலங்களும் பணக்காரர்களும் போட்டியிட்டாலும் கவுதம் கம்பீர் முதலிடத்தில் உள்ளார். அவர் தனது வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு 147 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். 2017-18ம் நிதியாண்டில் வருமான வரியாக மட்டும் 12 கோடியே 40 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளதாகவும், தனது மனைவி, நடாஷா, 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வருமான வரி செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

English summary
Former Cricketer and Delhi BJP candidate Gowtham Gambhi is topped among Millionaire BJP candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X