டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்வானி இடத்தில் அமித்ஷா.. முடிவுக்கு வந்த அரசியல் சகாப்தம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP Candidates List: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ

    டெல்லி: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத்தின் காந்திநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

    காந்திநகர் லோக்சபா தொகுதியில் தற்போதைய உறுப்பினராக இருப்பவர் அத்வானி. ஆனால், அவருக்குப் பதிலாக அமித்ஷாவுக்கு அங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் அத்வானியின் அரசியல் வாழ்க்கைக்கு இப்போது உள்ள பாஜக தலைமை அஸ்தமன திசையை காட்டி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

    வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகிய இருவரும் பாஜகவின் இரு முகங்களாக அறியப்பட்டவர்கள்.

    பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. வாரணாசியில் மீண்டும் மோடி.. காந்திநகரில் அமித்ஷா போட்டிபாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. வாரணாசியில் மீண்டும் மோடி.. காந்திநகரில் அமித்ஷா போட்டி

    இரும்பு மனிதர்

    இரும்பு மனிதர்

    பாபர் மசூதி இடிப்பு போன்ற விவகாரங்களால், பிரதமர் நரேந்திர மோடி இப்போது எவ்வாறு பாஜக ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரிகளால் பார்க்கப்படுகிறாரோ, அதுபோன்ற கண்ணோட்டத்தில் முன்பு பார்க்கப்பட்டவர் அத்வானி. இரும்பு மனிதர் என்றெல்லாம் அழைத்து மகிழ்ந்தனர். குஜராத் கலவரம் தொடர்பாக அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியை, வாஜ்பாய் கோபத்தில் இருந்து காப்பாற்றியதும் அத்வானிதான் என்ற தகவலும் உண்டு.

    குடியரசு தலைவர் பதவி

    குடியரசு தலைவர் பதவி

    ஆனால், நரேந்திர மோடியின் விஸ்வரூப வளர்ச்சிக்குப் பிறகு, பாஜகவில் அத்வானி அரசியல் வாழ்க்கை சுறுங்கிப் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது துணை பிரதமர் பதவி வகித்த, அத்வானிக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்கி கவுரவமாக அரசியல் ஓய்வு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

    வாய்ப்பு மறுப்பு

    வாய்ப்பு மறுப்பு

    இந்த நிலையில் ஐந்து முறை தொடர்ந்து காந்தி நகரில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்வானிக்கு, இப்போது அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டு விட்டது. நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரின் முழு கட்டுப்பாட்டுக்குள் பாஜக சென்ற பிறகு, அத்வானிக்கு மீண்டும் அரசியல் மறுமலர்ச்சி என்பது கனவாகவே போய்விட்டது.

    ஒதுங்கிக் கொண்ட அத்வானி

    ஒதுங்கிக் கொண்ட அத்வானி

    கடந்த ஐந்து ஆண்டுகளில் லோக்சபாவில் 92% வருகைப்பதிவேடு வைத்துள்ளபோதிலும், அத்வானி அங்கு, பேசிய வார்த்தைகள் வெறும் 365 என்பதிலிருந்து அவர் எந்த அளவுக்கு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார் என்பது உங்களுக்கே புலனாகும்.

    English summary
    Bharatiya Janata Party president Amit Shah will contest the upcoming Lok Sabha from Gujarat's Gandhinagar. BJP stalwart LK Advani's political career in over.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X