டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராமர் கோயில் கட்டுமானப்பணிக்கு... கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை!

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப்பணிக்கு பா.ஜ.க. எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

பிரமாண்ட முறையில் கட்டப்பட உள்ள ராமர் கோயில் கட்டுமானப்பணிக்கு அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர்.

Gautam Gambhir Contributes 1 Crore For Ram Temple Construction

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து கோயில் கட்டுமானப் பணிகளுக்குக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் என பிரமாண்ட முறையில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி குவிந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர். இதுவரை பல ஆயிரம் கணக்கில் நிதி சேர்ந்துளளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிழக்கு டெல்லி பா.ஜ.க. எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர், ராமர் கோயில் கட்டுமானபணிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கவுதம் கவுதம் கம்பீர் கூறியதாவது:- புகழ்பெற்ற ராமர் கோயில் அனைத்து இந்தியர்களின் கனவாக இருந்து வருகிறது. இறுதியாக இந்த நீண்டகால பிரச்சினை முடிவுக்கு வந்தது. இது ஒற்றுமைக்கும், அமைதிக்கும் வழி வகுக்கும். இந்த முயற்சியில் என்னிடமிருந்தும், எனது குடும்பத்தினரிடமிருந்தும் ஒரு சிறிய பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கவுதம் கம்பீர் கூறினார்.

English summary
BJP MP and former cricketer Gautam Gambhir has donated Rs 1 crore to build Ayodhya Ram temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X