டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவரை தாக்கியது தவறு.. ஒரே ஒரு டிவிட்டால் கம்பீரை 'டக் அவுட்' செய்த பாஜகவினர்.. என்ன நடந்தது!

குருகிராமில் இஸ்லாமியர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் குறித்து டிவிட் செய்து பாஜக எம்.பி கவுதம் கம்பீர் பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Gautam Gambhir: ஒரே ஒரு டிவிட்டால் கம்பீரை விமர்சனம் செய்த பாஜகவினர்- வீடியோ

    டெல்லி: குருகிராமில் இஸ்லாமியர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் குறித்து டிவிட் செய்து பாஜக எம்.பி கவுதம் கம்பீர் பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    பிரதமர் மோடி தலையிலான பாஜக ஆட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. வரும் 30ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மீண்டும் பதவி ஏற்க உள்ளது.

    இந்த நிலையில் நாட்டில் மீண்டும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகம் ஆகியுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் நிறுத்தப்பட்டு இருந்த தாக்குதல்கள் தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.

    என்ன தாக்குதல்

    என்ன தாக்குதல்

    நேற்று முதல்நாள் ஹரியானா மாநிலம் குருகிராமில் முகமது பரக்கத் ஆலம் என்ற இஸ்லாமியர் தாக்கப்பட்டார். தொழுதுவிட்டு வீடு திரும்பும் போது அவர் சில இந்துக்களால் தாக்கப்பட்டார். பரக்கத் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்ல வேண்டும் என்று வறுபுறுத்தப்பட்டுள்ளார். அவர் சொல்ல மறுத்ததால், மோசமாக தாக்கப்பட்டார்.

    என்ன கருத்து

    இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதி எம்பியாக தேர்வாகி இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் டிவிட் செய்துள்ளார். அதில், குருகிராமில் ஒரு இஸ்லாமியரை தலை பாகையை கழற்றி சொல்லி, ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி தாக்கி இருக்கிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம் இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் வாழ்வது மதசார்பற்ற நாடு, என்று கம்பீர் குறிப்பிட்டார்.

    பாஜக கருத்து

    பாஜக கருத்து

    இதற்கு எதிராக பாஜகவின் தொண்டர்கள் பலர், இந்துத்துவா கருத்து கொண்ட பலர் டிவிட் செய்து வருகிறார்கள். கம்பீர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலர் அவரது டிவிட்டில் கோரிக்கை வைத்து வருகிறார்கள். சிலர் கம்பீரை மிக மோசமான வார்த்தையால் விமர்சித்து வருகிறார்கள்.

    இன்னொரு டிவிட்

    இதையடுத்து கம்பீர் இன்னொரு டிவிட் செய்துள்ளார். அதில் , நான் எப்போது பிரதமர் மோடியின் மதசார்பற்ற கருத்துக்களை பின்பற்ற கூடியவன். நான் குருகிராம் சம்பவம் குறித்து மட்டும் பேசவில்லை. மதம் , சாதி ரீதியாக எங்கு ஒடுக்குமுறை நடந்தாலும் அதை ஏற்க முடியாது. சகிப்புத்தன்மையுடன் கூடிய வளர்ச்சிதான் இந்தியாவின் அஸ்திவாரம், என்று அவர் கூறியுள்ளார்.

    English summary
    BJP MP Gautam Gambhir tweet on Gurugram attack becomes controversial.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X