டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 தொழிற்துறைகளின் வளர்ச்சி மொத்தமாக காலி.. ஜிடிபி சரிவோடு மத்திய அரசு கொடுத்த ஷாக் செய்தி!

நடப்பு நிதி ஆண்டின் 2வது காலாண்டில் இந்தியாவில் 8 ஆதார உற்பத்தி தொழிற்துறைகளின் வளர்ச்சி மொத்தமாக சரிந்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நடப்பு நிதி ஆண்டின் 2வது காலாண்டில் இந்தியாவில் 8 ஆதார உற்பத்தி தொழிற்துறைகளின் வளர்ச்சி மொத்தமாக சரிந்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மொத்தம் இதன் வளர்ச்சி 5.8% குறைந்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் நினைக்க முடியாத அளவிற்கு சரிவை சந்தித்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது. இது இந்தியாவில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வைத்து இருப்பவர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்டின் ஜிடிபி 4.5% ஆக குறைந்தது 6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்டின் ஜிடிபி 4.5% ஆக குறைந்தது

எப்படி இருந்தது

எப்படி இருந்தது

இந்த நிலையில் இந்தியாவின் ஜிடிபி குறைந்ததற்கு நிறைய காரணங்கள் கூறப்படுகிறது. வங்கிகளின் கையிருப்பு இல்லை, கடன்கள் திரும்ப வரவில்லை, மோசமான பொருளாதார கொள்கைகள், தவறான தாராளமயமாக்கல் என்று நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது.

மோசம்

மோசம்

இதனால் நடப்பு நிதி ஆண்டின் 2வது காலாண்டில் இந்தியாவில் 8 ஆதார உற்பத்தி தொழிற்துறைகளின் வளர்ச்சி மொத்தமாக சரிந்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மொத்தம் இதன் வளர்ச்சி 5.8% குறைந்துள்ளது. முக்கியமாக எரிபொருள் மற்றும் சக்தி துறையில்தான் சரிவு அதிகமாக ஏற்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி துறையில் வளர்ச்சி விகிதம் 17.6% குறைந்துள்ளது.

எங்கு சரிவு

எங்கு சரிவு

அதேபோல் கச்சா எண்ணெய் துறையில் 5.1% வளர்ச்சி குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு துறையில் 5.7% வளர்ச்சி குறைந்துள்ளது. இது போல சிமெண்ட் உற்பத்தில் 7.7% குறைந்துள்ளது. ஸ்டீல் உற்பத்தில் 1.6% குறைந்துள்ளது.

ஒரே துறை என்ன

ஒரே துறை என்ன

2018ல் இருந்தே இந்த துறைகளில் வளர்ச்சி சரிந்து வந்தது. தற்போது இது மோசமான நிலையை அடைந்துள்ளது. மின்சார உற்பத்தி 12.4% குறைந்துள்ளது. இந்த காலாண்டில் வளர்ச்சி அடைந்த ஒரே துறை உர உற்பத்தி மற்றும் விற்பனை துறைதான். இது இந்த காலாண்டில் 11.8% வளர்ந்துள்ளது.

English summary
GDP: As the economic slowdown deepens, 8 core industries output in October declined by 5.8%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X