டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜிடிபி 7.5% சரிவு : பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது - ராகுல் ட்வீட்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020-21 நிதியாண்டிற்கான, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.5 சதவிகிதமாக சரிந்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், இந்தியாவின் பொருளாதாரம் அதிகாரப்பூர்வமாக முதன்முறையாக மந்தநிலையில் உள்ளது என்று பதிவிட்டுள்ளா

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2020-21 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் -7.5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. முதலாவது காலாண்டில் இது -23.9 சதவிகிதமாக இருந்தது.
பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது. இந்த அடிப்படை உண்மையை பிரதமர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி.

2020-21ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ 33.14 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2019-20ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் ரூ 35.84 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 4.4% வளர்ச்சி ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு 7.5% சரிவை காட்டுகிறது.

GDP contracts by 7.5% PM needs to first understand this basic idea RahulGandhi tweets

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் -23.9 சதவிகிதம் சரிந்தது. இதன் மூலம் அதிகாரப்பூர்வ மந்தநிலையில் இந்தியா தற்போது இருப்பது உறுதியாகிறது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கடந்த புதன்கிழமை இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மீட்கும் வேகத்தில் வலுவான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

விவசாயிகள் போராட்டம்... இது ஆரம்பம் மட்டுமே - ராகுல்காந்தி ட்வீட் #IamWithFarmersவிவசாயிகள் போராட்டம்... இது ஆரம்பம் மட்டுமே - ராகுல்காந்தி ட்வீட் #IamWithFarmers

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23.9 சதவிகிதம் சரிவை நாடு கண்டபின், இரண்டாம் காலாண்டில் வேகமெடுத்துள்ளதாக சக்தி காந்த தாஸ் மேற்கோள் காட்டினார்.

இந்த நிலையில் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுருக்கம் ஏற்படக்கூடும் என்றும் தொழில்நுட்ப ரீதியாக மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை முன்பு கூறியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பொருளாதார மந்தநிலை பற்றி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

GDP contracts by 7.5% PM needs to first understand this basic idea RahulGandhi tweets

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், இந்தியாவின் பொருளாதாரம் அதிகாரப்பூர்வமாக முதன்முறையாக மந்தநிலையில் உள்ளது.மிக முக்கியமாக, MNREGA இன் கீழ் 3 கோடி மக்கள் இன்னும் வேலை தேடுகிறார்கள். பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது. இந்த அடிப்படை உண்மையை பிரதமர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி.

English summary
India's gross domestic product contracted 7.5 per cent in the July-September period. Rahulgandhi tweets his page Under PM Modi, India's economy is officially in a recession for the first time ever. More importantly, 3 crore people are still looking for work under MNREGA. Economy cannot be ordered to grow by diktats. PM needs to first understand this basic idea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X