டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டெக்னிக்கல் ரிசஷன்''.. இந்தியா பெரிய பொருளாதார மந்தநிலைக்குள் நுழைந்துவிட்டது.. ஆர்பிஐ எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா டெக்னிக்கல் ரிஷசன் எனப்படும் மாபெரும் பொருளாதார மந்தநிலையில் நுழைந்துவிட்டது என்று ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா காரணமாக உலகம் முழுக்க பல நாடுகளின் பொருளாதாரம் சரிந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளின் பொருளாதாரம் கூட மிக மோசமாக சரிந்துள்ளது. ஆனால் அந்த நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது.

40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவின் 2020-21 முதல் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 23.9% ஆக சரிந்துள்ளது.

மோடி அரசின் தவறான திட்டமிடலுக்கு கிடைத்த பரிசு.. பாதாளத்தில் ஜிடிபி.. ராகுல் காந்தி கிண்டல்! மோடி அரசின் தவறான திட்டமிடலுக்கு கிடைத்த பரிசு.. பாதாளத்தில் ஜிடிபி.. ராகுல் காந்தி கிண்டல்!

என்ன செய்தது

என்ன செய்தது

இந்த நிலையில் வருகிற காலாண்டிலும் இந்தியாவின் ஜிடிபி மிக மோசமாக சரியும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது. இந்தியா டெக்னிக்கல் ரிஷசன் எனப்படும் மாபெரும் பொருளாதார மந்தநிலையில் நுழைந்துவிட்டது என்று ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்தியாவின் நிதி நிலைமை, வேலைவாய்ப்பு பெரிய அளவில் பாதிக்கும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது.ஒரு நாட்டில் அடுத்தடுத்து இரண்டு காலாண்டு ஜிடிபி மோசமான சரிவை சந்தித்தால் அது டெக்னிக்கல் ரிஷசன் என்று அழைக்கப்படும்.

கணிப்பு

கணிப்பு

பல்வேறு பொருளாதார வல்லுநர்கள், நிபுணர்கள், ஆர்பிஐ அமைப்பின் துணை ஆளுநர் மைக்கல் பத்ரா அடங்கிய குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த குழுவின் கூற்றுப்படி.. 2020-21 நிதி ஆண்டில் இந்தியா அதிகாரபூர்வமாக டெக்னிக்கல் ரிஷசன் எனப்படும் மாபெரும் பொருளாதார மந்தநிலையில் நுழைந்துள்ளது.

ஜிடிபி

ஜிடிபி

அதோடு இந்த காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி பொருளாதாரம் 8.6% சரிய வாய்ப்புள்ளது. கடந்த காலாண்டின் சரிவு 23.9% ஆக உள்ள நிலையில்.. இந்த காலாண்டில் இது மேலும் சரிய உள்ளது. ஜூலை - செப்டம்பர் காலாண்டின் சரிவு குறித்து இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 பொருளாதார சரிவு

பொருளாதார சரிவு

இந்தியா முதல் முறை இப்படி ஒரு பொருளாதார சரிவை சந்திக்கிறது என்று ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. மூடிஸ் அமைப்பும் இந்தியாவின் 2020 வருடாந்திர ஜிடிபி 8.9% சரிய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. ப்ளூம்பெர்க் சர்வேயின் படி இந்த காலாண்டில் இந்திய ஜிடிபி சரிவு 10.4% ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் வரும் நாட்களில் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

English summary
GDP: India has entered technical recession for the first time says RBI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X