டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கணித்ததை விட மிக மோசம்.. ஜிடிபி சதவிகிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ப.சிதம்பரம்.. என்ன சொன்னார்?

இந்தியாவின் ஜிடிபி பெரிய அளவில் சரிய தொடங்கி உள்ளது குறித்து முன்னாள் நிதி துறை அமைச்சர் எம்பி ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் ஜிடிபி பெரிய அளவில் சரிய தொடங்கி உள்ளது குறித்து முன்னாள் நிதி துறை அமைச்சர் எம்பி ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

2019-2020ம் ஆண்டுக்கான ஜிடிபி 4.2% ஆக இருக்கும் என்று மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த ஜனவரி - மார்ச் வரை மூன்று மாதங்களுக்கான ஜிடிபி 3.1% ஆக உள்ளது. மொத்த ஜிடிபி கணிப்பு மோசமாக சரிந்துள்ளது .

11 வருடங்களில் மிக மோசம்.. இந்தியாவின் 2019-20 ஜிடிபி 4.2% ஆக சரியும்.. புள்ளியியல் அமைச்சகம் ஷாக்!11 வருடங்களில் மிக மோசம்.. இந்தியாவின் 2019-20 ஜிடிபி 4.2% ஆக சரியும்.. புள்ளியியல் அமைச்சகம் ஷாக்!

GDP: It is a telling commentary on the economic management of the BJP says P Chidambaram

கடந்த 11 வருடங்களில் இந்தியாவின் மிக மோசமான ஆண்டு ஜிடிபி இதுதான் என்று கூறுகிறார்கள்

GDP: It is a telling commentary on the economic management of the BJP says P Chidambaram

இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் நிதி துறை அமைச்சர் எம்பி ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான்காவது காலாண்டிற்கான ஜிடிபி 4% ஆக இருக்கும் என்று நான் கணிப்பு வெளியிட்டு இருந்தேன். ஆனால் இப்போது அதை விட ஜிடிபி குறைவாக இருக்கிறது.

GDP: It is a telling commentary on the economic management of the BJP says P Chidambaram

நான்காவது காலாண்டிற்கான ஜிடிபி வெறும் 3.1%தான் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. நினைவில் கொள்ளுங்கள், இது லாக்டவுன் தொடங்கும் முந்தைய காலத்திற்கான ஜிடிபி ஆகும். நான்காவது காலாண்டில் அதிக நாட்கள் லாக்டவுன் இல்லை.

GDP: It is a telling commentary on the economic management of the BJP says P Chidambaram

91 நாட்கள் லாக்டவுனில் நான்காவது காலாண்டில் வெறும் 7 நாட்கள் மட்டுமே லாக்டவுன் இருந்தது. ஆனாலும் கூட அந்த காலாண்டில் அதிக அளவு ஜிடிபி சரிவு ஏற்பட்டுள்ளது. இப்போது புரிகிறதா பாஜக அரசின் மோசமான நிதி கொள்கை மற்றும் செயல்பாடு குறித்து எவ்வளவு மோசம் என்று, என்று ப. சிதம்பரம் டிவிட் செய்துள்ளார்.

English summary
GDP: It is a telling commentary on the economic management of the BJP government says P Chidambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X