டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

11 வருடங்களில் மிக மோசம்.. இந்தியாவின் 2019-20 ஜிடிபி 4.2% ஆக சரியும்.. புள்ளியியல் அமைச்சகம் ஷாக்!

Google Oneindia Tamil News

டெல்லி: 2019-2020ம் ஆண்டுக்கான ஜிடிபி 4.2% ஆக இருக்கும் என்று மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்திய பொருளாதாரம் முடங்கி உள்ளது. அதேபோல் கொரோனா காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்கு இந்தியாவின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது .

GDP: The GDP during 2019-20 is estimated at 4.2 percent in India

இந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியிட்டும் பெரிய அளவில் பொருளாதார மாற்றங்கள் ஏற்படவில்லை. பொருளாதாரத்தில் திடீர் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இதையடுத்து 2019-2020ம் ஆண்டுக்கான ஜிடிபி 4.2% ஆக இருக்கும் என்று மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த ஜனவரி - மார்ச் வரை மூன்று மாதங்களுக்கான ஜிடிபி 3.1% ஆக உள்ளது. ஆனால் இந்த மூன்று மாத ஜிடிபி சதவிகிதம் மத்திய அரசு கணித்ததை விட அதிகம் என்று கூறுகிறார்கள். ஆனால் மொத்த ஜிடிபி கணிப்பு மோசமாக சரிந்துள்ளது .

ஏழைகளுக்கு ரூ.2500, ஜிஎஸ்டி, வருமான வரி தள்ளுபடி.. தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பு இவைதான்ஏழைகளுக்கு ரூ.2500, ஜிஎஸ்டி, வருமான வரி தள்ளுபடி.. தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பு இவைதான்

4.2% ஜிடிபி என்பது மிக மோசமானது ஆகும். கடந்த 11 வருடங்களில் இந்தியாவின் மிக மோசமான ஆண்டு ஜிடிபி இதுதான் என்று கூறுகிறார்கள். கடந்த 2018-19 ஆண்டுக்கான 6.1% ஆக இருந்தது. வேகமாக ஜிடிபி உயர்ந்த நிலையில் தற்போது வேகமாக மொத்தமாக ஜிடிபி சார்ந்துள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட லாக்டவுன் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

இதற்கு முன் இந்தியாவின் ஆண்டு ஜிடிபி விவரம்:

2010-11: 8.5
2011-12: 5.24
2012-13: 5.46
2013-14: 6.39
2014-15: 7.41
2015-16: 8
2016-17: 8.26
2017-18: 7.04
2018-19: 6.12
2019-20: 4.2 (கணிப்பு)

English summary
GDP: The GDP during 2019-20 is estimated at 4.2 percent as compared to 6.1 percent in 2018-19 in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X