டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிர்ச்சியாக இருக்கிறது.. மிகவும் கவலை அளிக்கிறது.. இந்தியாவின் ஜிடிபியால் மன்மோகன் சிங் ஷாக்!

இந்தியாவின் பொருளாதார நிலை கவலை அளிக்கிறது, 4.5% ஜிடிபி என்பதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொருளாதார வல்லுனரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் பொருளாதார நிலை கவலை அளிக்கிறது, 4.5% ஜிடிபி என்பதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொருளாதார வல்லுனரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஒரு வருடமாக மோசமான பொருளாதார சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு துறைகள் பெரிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது. இந்த பொருளாதார சரிவு காரணமாக மக்கள் நேரடியாக பாதிக்க தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது.

அட.. தினமும் ஒரு சாதனை.. ஜிடிபி சரிவால் பாஜகவை கடுமையாக கிண்டல் செய்யும் காங்கிரஸ்! அட.. தினமும் ஒரு சாதனை.. ஜிடிபி சரிவால் பாஜகவை கடுமையாக கிண்டல் செய்யும் காங்கிரஸ்!

ஜிடிபி மோசம்

ஜிடிபி மோசம்

இந்தியாவின் இந்த ஜிடிபி குறித்து பொருளாதார வல்லுனரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவின் ஜிடிபி 4.5% தான் என்பது பெரிய அதிர்ச்சி தருகிறது: கொஞ்சம் கூட ஏற்க முடியாது. நாம் எல்லாம் இந்தியாவின் ஜிடிபி 8-9% இருக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். அதற்கு ஏற்ற திட்டங்கள் போட வேண்டாம்.

பெரிய அதிர்ச்சி

பெரிய அதிர்ச்சி

முதல் காலாண்டில் 5% என்ற ஜிடிபியே அதிர்ச்சி அளித்தது. அதன்பின் இன்னும் ஜிடிபி குறைந்துள்ளது. இரண்டாவது காலாண்டில் ஜிடிபி மிக மோசமான நிலையான 4.5% என்ற நிலையை அடைந்துள்ளது. எனக்கு கவலை அளிக்கும் விஷயம் இந்த சரிவுதான்.

 நடவடிக்கை இல்லை

நடவடிக்கை இல்லை

போதுமான சீர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. சிறு சிறு திருத்தங்கள், திட்டங்கள் எல்லாம் நமக்கு உதவாது. சரியான பொருளாதார திட்டங்களை வகுத்து, அதிரடியாக செயல்படுத்தினால் மட்டுமே இதில் இருந்து தப்பிக்க முடியும்.

சமுதாயம் எப்படி

சமுதாயம் எப்படி

அதே சமயம் சமுதாய பிரச்சனையும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. சமுதாய பிரச்சனைதான் இந்த பொருளாதார நிலையை பிரதிபலிக்கிறது. சமுதாயத்தில் வெறுப்புணர்வு அதிகம் ஆகியுள்ளது. பொருளாதாரத்தை விட சமுதாய பிரச்சனை அதிக கவலை அளிக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

English summary
GDP: The state of our economy is deeply worrying says former Prime Minister Manmohan Singh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X