• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கார்கில் போர்: சுதந்திரமாக விட்டிருந்தால் பாக். பகுதிகளை கைப்பற்றியிருக்கலாம்.. முன்னாள் ராணுவ தளபதி

Google Oneindia Tamil News

டெல்லி: கார்கில் போரில் வெற்றிக்கு பின்னர் எங்களை சுதந்திரமாக விட்டிருந்தால் பாகிஸ்தானின் சில பகுதிகளை கைப்பற்றியிருப்போம் என அப்போதைய ராணுவ தளபதி விபி மாலிக் தெரிவித்துள்ளார்.

  Kargil | Pak சதியை முறியடித்த Indian Army | Atal Bihari Vajpayee | Oneindia Tamil

  1999 ஆம் ஆண்டு இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் தீவிரவாதிகள் சிலர் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் ஊடுருவியிருந்தனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

  2 கைகளையும் இழந்த 21 வயது இளைஞர்.. காலில் தடுப்பூசி செலுத்திய நர்ஸ்கள்.. கேரளாவில்..!2 கைகளையும் இழந்த 21 வயது இளைஞர்.. காலில் தடுப்பூசி செலுத்திய நர்ஸ்கள்.. கேரளாவில்..!

  கார்கிலில் நடந்த போருக்கு ஆபரேஷன் விஜய் என பெயரிடப்பட்டிருந்தது. இந்த போரில் இந்திய ராணுவம் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ராணுவத்தினரையும் பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்று கார்கில் பகுதியில் வெற்றிக் கொடி நாட்டியது. இந்த போரில் 500-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

  போர்

  போர்

  1999ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி இந்த போர் முடிவுக்கு வந்ததால் இந்த நாள் விஜய் திவாஸாக கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து அப்போது ராணுவ தளபதியாக இருந்த விபி மாலிக் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் ஆபரேஷன் விஜய் என்பது உறுதியான அரசியல், ராணுவ மற்றும் ராஜீயரீதியிலான நடவடிக்கைகளின் கலவையாகும்.

  பாதகமான சூழல்

  பாதகமான சூழல்

  இது ஒரு பாதகமான சூழ்நிலையை ஒரு உறுதியான ராணுவ வெற்றியாக மாற்ற எங்களுக்கு உதவியது. உயர் பாதுகாப்பு தடுப்பு நிறுவனத்தின் பலவீனத்தை கார்கில் போர் தெரியவைத்தது. கார்கில் போரானது இந்தியா- பாகிஸ்தான் பாதுகாப்பு நல்லுறவுகளில் மிக முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

  பாகிஸ்தான்

  பாகிஸ்தான்

  இந்தியாவில் ஊடுருவியவர்கள் பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினர் என்ற விஷயத்தை நம்புவதற்கே அப்போதைய பிரதமர் வாஜ்பாயிக்கு கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டது. பின்னர் அவர் நவாஸ் ஷெரீபிடம் "என்னை புறமுதுகில் குத்தி விட்டீர்கள்" என்றார்.

  கண்காணிப்புத் துறை

  கண்காணிப்புத் துறை

  உளவுத் துறை மற்றும் கண்காணிப்பு துறையின் தோல்வியால் ஊடுருவியவர்கள் யார் என்பதை கண்டறிவதில் சற்று குழப்பம் நிலவியது. அவர்கள் எந்த வழியாக வந்தார்கள், எங்கிருக்கிறார்கள் என்பது குறித்த எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது. கார்கில் போரில் இந்தியா வென்ற பிறகு எங்களை சுதந்திரமாக செயல்பட வைத்திருக்கலாம்.

  போர் நிறுத்தம்

  போர் நிறுத்தம்

  அவ்வாறு வைத்திருந்தால் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு முன்னர் பாகிஸ்தானின் சில பகுதிகளை இந்திய ராணுவத்தினர் கைப்பற்றியிருக்கக் கூடும். கார்கில் போரின் போது எங்களுக்கு மைனஸ் டிகிரி உறைநிலை பனியை சமாளிக்க பிரத்யேக உடையோ ஷூக்களோ இல்லை. ஊடுருவல்காரர்களை கண்காணிக்க பிரத்யேக கருவிகளோ ராடார்களோ இல்லை.

  20ஆயிரம் அடி உயரம்

  20ஆயிரம் அடி உயரம்

  இதனால் ராணுவ ஹெலிகாப்டர்களை 20 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கவிட்டு அவர்களை கண்டுபிடித்தோம். ஆனால் இன்றோ செயற்கைகோள் புகைப்படங்கள் எல்லாம் வந்துவிட்டன. நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது நான் ஓய்வு பெற்றேன். ஆனால் அந்த தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுத்திருக்க வேண்டும்.

  பாகிஸ்தான்

  பாகிஸ்தான்

  பாகிஸ்தான் அது போன்ற ஒரு சூழலை மீண்டும் உருவாக்கினால் நாம் பதிலடி கொடுக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அது எந்த மாதிரியான பதிலடி என்பதை ராணுவமும் அரசியல்வாதிகளும் முடிவு செய்ய வேண்டியது என்றார் மாலிக்.

  English summary
  General VP Malik says that We should have been allowed to capture some of Pakistan Territory before cease fire.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X