டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீர் ஆளுநர் பதவியில் இருந்து விலகிய முர்மு நாட்டின் ஆடிட்டர் ஜெனரலாக நியமனம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் பதவியில் இருந்து விலகிய கிரிஷ் சந்திர முர்மு அடுத்த ஒரே நாளில் இந்தியாவின் ஆடிட்டர் ஜெனரல்.(CAG) ஆக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிஷ் சந்திர முர்மு ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி நியமிக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு நியமனம் செய்யப்பட்டார். கடந்த 9 மாதங்களாக ஆளுநராக பதவி வகித்து வந்த முர்மு நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் பதவியில் இருந்து விலகினார். அவரது பதவி விலகலை ஆளுநர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

Gireesh Chandra Murmu appointed the new Comptroller and Auditor General of India

இந்நிலையில் பதவி விலகிய ஒரு நாளைக்கு பின்னர் வியாழக்கிழமை அன்று, இந்தியாவின் ஆடிட்டர் ஜெனரலாக கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். ஆடிட்டர் ஜெனரல் ராஜீவ் மெக்ரிசியின் பதவி காலம் இந்த வாரத்துடன் முடிவதையடுத்து முர்மு அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக முர்மு ஆளுநராக பதவி வகிக்கும் முன்பு மத்திய நிதி அமைச்சகத்தில் செலவின செயலாளராக இருந்தார், மேலும் 2015 நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட மேம்பாட்டுப் பேக்கேஜை வரைவு செய்தார்.

அந்த பக்கம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி .. இந்த பக்கம் அமெரிக்கா தடுப்பூசி.. கலக்கும் சீரம் நிறுவனம் அந்த பக்கம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி .. இந்த பக்கம் அமெரிக்கா தடுப்பூசி.. கலக்கும் சீரம் நிறுவனம்

அண்மையில் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு முர்மு அளித்த பேட்டியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சி காலவரையின்றி இருக்க முடியாது என்றும் தேர்தல்கள் வெகு தொலைவில் இருக்காது" என்றும் கூறியிருந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு புதிய துணை நிலை ஆளுநராக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். '

English summary
Day after he resigned as J&K L-G, Gireesh Chandra Murmu appointed the new Comptroller and Auditor General of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X