டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பல பெண்கள் நாசம்.. வீடியோ வெளியிட்ட மறுநாளே மாணவி மாயம்.. பாஜக மாஜி மத்திய அமைச்சர் மீது புகார்

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக சேர்ந்த, முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்த் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட சட்டக் கல்லூரி மாணவி திடீரென மாயமாகி உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள எஸ்எஸ் சட்டக் கல்லூரியின் இயக்குநராக செயல்படுபவர், முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த். இந்த கல்லூரியின், ஹாஸ்டலில் தங்கி படித்து வருபவர் ஒரு இளம்பெண்.

இவர் கடந்த வாரம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

வாழ்க்கை நாசம்

வாழ்க்கை நாசம்

அந்த வீடியோவில் அவர் கூறுகையில், ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள எஸ்எஸ் கல்லூரியில் எல்எல்எம், படித்து வருகிறேன். துறவிகள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெரிய தலைவர், பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறார். என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். அவருக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளன.

மோடி உதவ வேண்டும்

மோடி உதவ வேண்டும்

பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் எனக்கு, உதவி செய்யவேண்டும். எனது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன நான் குற்றம் சாட்டுபவர் ஒரு சன்னியாசி. காவல்துறை முதல், மாவட்ட நீதிபதி வரை அனைவருமே அவருக்குத்தான் ஆதரவாக இருப்பதாக கூறி எங்களை மிரட்டி வருகிறார். எனக்கு நீதி வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் அந்தப்பெண் தெரிவித்திருந்தார்.

பெண் மாயம்

பெண் மாயம்

ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்த வீடியோ வெளியான நிலையில், மறுநாளான 24ம் தேதி முதல் அந்தப் பெண் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் மாயமாகிவிட்டார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில், சுவாமி சின்மயானந்தாவுக்கு, எதிராக புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரை உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் சுமார் மூன்று நாட்கள் கழித்து ஏற்றுக்கொண்டது காவல்துறை.

வழக்கு தள்ளுபடி

வழக்கு தள்ளுபடி

அதேநேரம் இது போன்று வீடியோவை வெளியிட்டு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த அந்த மாணவியும் அவரது குடும்பத்தாரும் முயற்சி செய்ததாக சின்மயானந்தா அளித்த புகாரை உடனடியாக காவல்துறை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஒரு சம்பவத்தை நினைவு கூறுவது அவசியம். 2011ம் ஆண்டில் சுவாமி சின்மயானந்தாவுக்கு, எதிராக அவரது ஆசிரமத்தில் பல ஆண்டுகளாக தங்கியிருந்த ஒரு பெண் பாலியல் பலாத்கார புகார் மற்றும் கடத்தல் புகார் அளித்திருந்தார். ஆனால் கடந்த ஆண்டு இந்த முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்வதாக யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்தது. இப்போது சட்டக் கல்லூரி மாணவி தந்தை, சின்மயானந்தாவுக்கு எதிராக கடத்தல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Girl Student, after accused Ex-BJP MP Swami Chinmayanand of harassment, missing. Swami Chinmayanand is a former union minister state of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X