டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்!

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தன்னை பிரதமராக்க ஆதரவு அளித்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கறாராக தெரிவித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தன்னை பிரதமராக்க ஆதரவு அளித்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கறாராக தெரிவித்து இருக்கிறார்.

இன்னும் அதிகபட்சம் 12 மணி நேரம்தான். லோக்சபா தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டுவிடும். நாளை மாலை இதே நேரம், லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும்.

இந்த நிலையில் யார்தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக போவது என்று நிறைய கேள்விகள் எழுந்து இருக்கிறது. இதற்கு மத்தியில்தான் மாயாவதி தனது பிரதமர் ஆசையை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.

லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில் லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்

எதிர்க்கட்சிகள் திட்டம்

எதிர்க்கட்சிகள் திட்டம்

இதுவரை 21 எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைக்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான பல கட்ட பேச்சுவார்த்தைகளை எதிர்கட்சிகளை நடத்தி முடித்துவிட்டது. நாளை மாலை பெரும்பாலும் எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

தெரிவித்தார்

தெரிவித்தார்

இந்த நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தன்னை பிரதமராக்க ஆதரவு அளித்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கறாராக தெரிவித்து இருக்கிறார். தென்னிந்தியாவை சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவர் சில நாட்களுக்கு முன் மாயாவதியை கூட்டணிக்காக சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது, மாயாவதி கறாராக இப்படி குறிப்பிட்டுள்ளார்.

ஏன் கோரிக்கை

ஏன் கோரிக்கை

மாயாவதிக்கு ஏற்கனவே அகிலேஷ் யாதவின் ஆதரவு இருக்கிறது. அதேபோல் ஆம் ஆத்மி மற்றும் ஆர்ஜெடி ஆதரவும் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் இவருக்கு ஆதரவு அளிக்கும் என்கிறார்கள். அதனால் பிரதமர் ஆவதில், மாயாவதி மிக மிக உறுதியாக இருக்கிறார். இந்த கோரிக்கையை மாயாவதி நாளை கண்டிப்பாக ஆலோசனையின் போது வைக்க உள்ளார்.

சிலர் எதிர்ப்பு

சிலர் எதிர்ப்பு

அதே சமயம் மாயாவதியின் கோரிக்கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வருகிறது. முக்கியமாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
Give Support than take Support Mayawati clearly said her wish for PM Post to a South Leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X