டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் வாசனை தட்டி கொடுத்து ரொம்ப நேரம் பேசிய மோடி.. இன்று டெல்லியில் இருவரும் அதிரடி சந்திப்பு!

பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார் ஜிகே வாசன்

Google Oneindia Tamil News

Recommended Video

    GK Vasan met Prime Minister Narendra Modi| மோடியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு ஏன் ?

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த முறை சென்னைக்கு வந்திருந்தபோது விமான நிலையத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனை தனியாக ஸ்பெஷலாக நெருங்கிச் சென்று ரொம்ப நேரம் பேசினார். டெல்லிக்கு வாங்க என்றும் அழைத்தார். இன்று டெல்லி சென்ற வாசன், மோடியை சந்தித்துப் பேசினார்.

    இந்த சந்திப்பு பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை ஜி.கே.வாசன் பாஜகவில் இணையப் போகிறாரா, தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்படப் போகிறாரா என்ற பழைய எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பியுள்ளது.

    தமிழக பாஜக தலைமையில்லாமல் தவித்துக் கொண்டுள்ளது. அதிரடியாக செயல்பட்டு வந்த டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ஆளுநராகிப் போனதற்குப் பிறகு தலைவர் நியமிக்கப்படாமல் உள்ளது. இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.

    பாஜக

    பாஜக

    இந்த நிலையில்தான் ஜி.கே.வாசன் பாஜகவில் கட்சியை இணைக்கப் போகிறார் பாஜக தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் ரெக்கை கட்டி பறந்தன. ஆனால் அதை தமாகா தரப்பு மறுத்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் சீன அதிபரும், பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசினர்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    இந்த சந்திப்புக்காக சென்னை வந்த போது வாசனிடம் நெருங்கிப் பேசினார் பிரதமர் மோடி. வாசனிடம் உரிமையாகப் பேசிய அவர் டெல்லிக்கு வாங்க உங்களுடன் பேச வேண்டும் என்றும் கூறினார். இதனால் எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்தது. நிச்சயம் வாசன், பாஜக பக்கம் போகத்தான் போகிறார் என்று அடித்துப் பேசவே ஆரம்பித்து விட்டனர்.

    நல்ல இமேஜ்

    நல்ல இமேஜ்

    தமிழக அரசியல்வாதிகளில் வாசன் மிகவும் டீசன்ட்டானவர். யாரையும் அநாகரீகமாக பேச மாட்டார். தேவையில்லாத வார்த்தைகளை விட மாட்டார். பொறுமையாக பேசுவார். அதிர்ந்து பேச மாட்டார். திட்ட மாட்டார். காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார். தப்புத் தப்பாகவும் பேச மாட்டார். இப்படி நிறைய பிளஸ்களை வைத்துள்ள அவருக்கு நம்ம வீட்டுப் பிள்ளை என்ற இமேஜும் உள்ளது.

    சாப்ட் கார்னர்

    சாப்ட் கார்னர்

    எல்லாக் கட்சியிலும் வாசனை விரும்புபவர்கள் உள்ளனர். அது திமுகவாக இருந்தாலும் காங்கிரஸாகவே இருந்தாலும் சரி, வாசனுக்கென்று ஒரு சாப்ட் கார்னர் இருக்கவே செய்கிறது. இந்த வகையில் தற்போது வாசன், மோடியைச் சந்தித்துள்ளார். ஆனால், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று வாசன் தெரிவித்துள்ளார்.

    மரியாதை நிமித்தம்

    மரியாதை நிமித்தம்

    சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் ஜிகே வாசன் பேசியபோது, " பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தேன். அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் எடுத்து சொன்னேன். நான் தெரிவித்த கருத்துக்களை பிரதமர் மோடி கவனமுடன் கேட்டுக் கொண்டார். மகாராஷ்டிரா விவகாரத்தில் அமித் ஷாவின் பங்கு அதிகமாக உள்ளது. இந்த முறை அமித்ஷாவை சந்திக்கவில்லை. தமாகா தனித்தன்மையோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்றார்.

    English summary
    tmc leader gk vasan meets pm modi and amitshah at delhi today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X