டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய மருந்தான 'ஃபேவிபிராவிர்' 3ம் கட்ட சோதனை.. உற்சாகம் அளிக்கும் முடிவுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஏழு மருத்துவமனைகளில் ஃபேவிபிராவிர் மருந்து கொடுத்து நடத்தப்பட்ட 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையில் நேர்மறையான முடிவுகள் வந்துள்ளதாக உள்நாட்டு மருந்து நிறுவனமான க்ளென்மார்க் மருந்துகள் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

Recommended Video

    Favipiravir 3ம் கட்ட சோதனை முடிவுகள் வெளியீடு

    கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளைப் போல் இந்தியாவும் தீவிரமாக இறங்கி உள்ளது.

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டட லேசான மற்றும் மிதமான நோயாளிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்காக வைரஸ் எதிர்ப்பு மருந்தாஃபேவிபிராவிர் மருந்தை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, க்ளென்மார்க் மருந்துகள் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம்(டி.சி.ஜி.ஐ) உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்த ஒப்புதலைப் பெற்றன.

    இந்நிலையியில் இந்தியாவில் ஏ ழு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்குஃபேவிபிராவிர் மருந்து அளித்து சோதிக்கப்பட்டது. மற்ற வழக்கமான கொரோனா நோயாளிகளுடன் ஒப்பிடும்போது ஃபேவிபிராவிர் மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகளின் உடலில் நல்ல முன்னேற்றம் தெரியவந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி; 7 இடங்களில் விரிவுபடுத்தப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி; 7 இடங்களில் விரிவுபடுத்தப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

    மருத்துவ பரிசோதனை

    மருத்துவ பரிசோதனை

    ஆர்டிசி பரிசோதனை செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. வழக்கமான சிகிச்சை மற்றும்ஃபேவிபிராவிர் சிகிச்சை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. 150 நோயாளிகளுக்கு இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    14 நாட்கள் மருந்து

    14 நாட்கள் மருந்து

    நோயாளிகள் முதல் நாளில் 3,600 மி.கிஃபேவிபிராவிர் மாத்திரைகளைப் பெற்றனர், தொடர்ந்து 800 மி.கி தினமும் இரண்டு முறை அதிகபட்சம் 14 நாட்கள் வரை, லேசான (90 நோயாளிகள்) மற்றும் மிதமான (60 நோயாளிகள்) நோயின் தீவிரத்தின் அடிப்படையில் மருந்து பெற்றுள்ளார்கள்.

    செயல்திறன் அதிகம்

    செயல்திறன் அதிகம்

    ஃபெவிபிராவிர் மருந்தின் இந்த மூன்றாம் கட்ட சோதனையில , மற்ற நோயாளிகளுடன் ஒப்பிடும் வைரஸ்களை அழிப்பதில் ஒட்டுமொத்த செயல்திறன் 28.6 சதவிகிதம் அதிகமாக உள்ளது.. ஃபேவிபிராவிர் மருந்தை உட்கொண்டதில் இருந்து அதை நிறுத்தும் வரையிலான காலத்தை அளவிட்டதில் இந்த முடிவுகள் கிடைத்திருப்பாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நோயின் தாக்கம்

    நோயின் தாக்கம்

    கொரோனா அறிகுறிகளை இயல்பாக்குவது குறித்த மருத்துவரின் மதிப்பீடாக வரையறுக்கப்பட்ட 'மருத்துவ சிகிச்சை' முறையின் படி குறைந்ததது 40 சதவீதம் பேர் வேகமாக குணம் அடைந்துள்ளனர். உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் செறிவு, சுவாசம் மற்றும் இருமல் ஆகிய பிரச்சனைகள் குறைய சாதாரண சிகிச்சையில் ஐந்து நாட்கள் ஆகிறது என்றால்,ஃபேவிபிராவிர் சிகிச்சையில் அதைவிட குறைவாக மூன்று நாட்கள் தான் ஆவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்து.

    ஆக்ஸிஜன் அளவு

    ஆக்ஸிஜன் அளவு

    ஃபேவிபிராவிர் சிகிச்சைப் பிரிவில் சுமார் 69.8 சதவீத நோயாளிகள் 4 ஆம் நாளுக்குள் குணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வழக்கமான சிகிச்சை முறையில் 44.9 சதவீத நோயாளிகளே குணம் ஆகி இருக்கிறார்கள். மருத்துவ ரீதியாக மோசமடைந்து ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளில்,ஃபேவிபிராவிர் பெறுபவர்களுக்கு க்ஸிஜன் செலுத்தும் கால அளவிலும் நல்ல முன்னேற்றம் கிடைத்திருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    patients randomised to Favipiravir treatment arm reported faster clinical cure and faster viral clearance than those randomized to the routine care group.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X