டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது- ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடம்

Google Oneindia Tamil News

டெல்லி: உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியாவே தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

Recommended Video

    4ல் ஒரு இந்தியருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி

    உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,28,31,350; கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7,96,287. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,98,297.

    Global Coronavirus Positives 2,28,31,350

    ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஒரே நாளில் 68,507 பேருக்கு கொரோனா உறுதியானது. பிரேசிலில் 44,684 பேரும் அமெரிக்காவில் 44,377 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருவில் மிக அதிகமாக நேற்று 8,639பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    அமெரிக்காவே மொத்த கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,45,308; பிரேசிலில் 35,05,097; இந்தியாவில் மொத்த எண்ணிக்கை 29,04,329.

    இ பாஸ் ஈஸியாகிடுச்சேன்னு நினைத்து.. தமிழகத்திலிருந்து பெங்களூர் போய்விட வேண்டாம்.. இதை பாருங்க இ பாஸ் ஈஸியாகிடுச்சேன்னு நினைத்து.. தமிழகத்திலிருந்து பெங்களூர் போய்விட வேண்டாம்.. இதை பாருங்க

    அமெரிக்காவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,77,351; பிரேசிலில் 112,423; இந்தியாவில் 54,975 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது.

    English summary
    As many as 2,28,31,350 people around the world have been diagnosed with Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X