டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23.17 லட்சமாக உயர்வு

Google Oneindia Tamil News

டெல்லி: உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,17,739 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா எனும் தொற்றுநோயில் சிக்கி உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. பெரும் பொருளாதார பாதிப்பையும் உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன.

Globally Coronavirus positive cases goes beyond 23 lakh

இந்த நோய்க்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,17,739 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1,59,510 ஆக உயர்ந்தது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,32,197 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 39 ஆயிரமாக ஆனது.

ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,91,726 ஆனது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 20,043 ஆக உயர்ந்தது.

கொரோனா வைரஸ் லாக் டவுன் - தஞ்சை, திருவண்ணாமலை கோவில் சித்திரை திருவிழா ரத்துகொரோனா வைரஸ் லாக் டவுன் - தஞ்சை, திருவண்ணாமலை கோவில் சித்திரை திருவிழா ரத்து

Recommended Video

    கொரோனாவால் பெண்களை விட ஆண்கள் ஏன் அதிகம் இறக்கிறார்கள்?-காரணங்கள் இதுதான்!

    அதுபோல் தொற்று நோய் பரப்பும் மையாக கருதப்பட்ட இத்தாலியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,75,925 ஆக உயர்ந்துள்ளது. இங்கு பலியானோரின் எண்ணிக்கை 23,227 ஆனது. பிரான்ஸில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,49,149 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 19,323 ஆனது.

    English summary
    Globally Coronavirus positive cases goes beyond 23 lakhs. Death toll increases to 1.59 lakhs which is closer to 1.6 lakhs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X