டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமரையே தப்பா பேசுறியா...மோடியை அவதூறாக பேசிய விமானியை பணியில் இருந்து தூக்கிய விமான நிறுவனம்!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்து டுவிட்டரில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட விமானியை கோ ஏர் விமான நிறுவனம் பணியில் இருந்து நீக்கியது.

பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த விமானி, பிரதமர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

GoAir sacks pilot over derogatory tweets against PM Modi

கோ ஏர் விமான நிறுவனத்தில் பணி புரிந்த மூத்த விமானி ஒருவர் கடந்த 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி குறித்து டுவிட்டரில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இதனை அறிந்த கோ ஏர் விமான நிறுவனம், அந்த விமானியை அதிரடியாக பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

59 பேருடன் புறப்பட்ட இந்தோனேஷிய விமானம் மாயம்.. ரேடார் தொடர்பும் துண்டிப்பு!59 பேருடன் புறப்பட்ட இந்தோனேஷிய விமானம் மாயம்.. ரேடார் தொடர்பும் துண்டிப்பு!

இது தொடர்பாக "கோ ஏர்' நிறுவனம் டுவிட்டரில் கூறுகையில், 'கோ ஏர் நிறுவனத்துக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை உள்ளது. அனைத்து ஊழியர்களும் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சமூக ஊடக நடத்தை உள்ளிட்ட கொள்கைகளுக்கு இணங்க வேண்டியது கட்டாயமாகும் என்று தெரிவித்தது.

இந்த நிலையில் பிரதமர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த விமானி தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் குறித்து நான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இது யாருடைய உணர்வை புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். இதற்கு நான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். பின்விளைவுகளை மனமுவந்து ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறி உள்ளார்.

English summary
GoAir fires pilot who posted defamatory comments on Twitter about Prime Minister Narendra Modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X