• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பிளே ஸ்டோரில் இருந்து சீனாவின் டிக் டாக் ஆப்பை நீக்கியது கூகுள்.. ஆப்பிளும் அதிரடி

|
  Tik Tok Removed From Google: பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது டிக் டாக் ஆப்- வீடியோ

  டெல்லி: மத்திய அரசின் கடிதத்தை ஏற்று, இந்தியாவுக்கான ஆப் பிளே ஸ்டாரில் இருந்து டிக் டாக் ஆப்பினை கூகுள் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் நீக்கியுள்ளன.

  இதனால் இனி இந்தியாவில் டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  சென்னை உயர்நீதிமன்றம் பெண்கள் மற்றும் குழந்தைகள் டிக் டாக் ஆப்பில் தவறாக சித்தரிக்கப்படுதாக கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று மத்திய அரசு கடிதம் எழுதியதால் டிக் டாக் ஆப் கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

  மருத்துவமனையிலிருந்து பிரச்சாரத்திற்கு கிளம்பி வந்த சசி தரூர்.. சபாஷ் போட்டு பாராட்டிய ராகுல்

  புதிதாக 9 கோடி பேர்

  புதிதாக 9 கோடி பேர்

  உலக மக்களை அவ்வப்போது சில தொழில்நுட்ப விஷயங்கள் வெகுவாக கவர்ந்துவிடும். அப்படி ஒரு தொழில்நுட்ப விஷயம் தான் டிக் டாக் ஆப். பின்னணி பாடலுக்கு வாயசைத்து, நடனம்ஆடி, டப்ஷ்மாஷ் செய்து பொழுதுபோக்கு வீடியோ வெளியிடும் சீனாவின் ஆப் உலகம் முழுவதும் சில மாதங்களில் அதி வேகமாக பரவியது. இந்தியாவில் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் புதிததாக 8 கோடியே 86 லட்சம் பேர் டிக்டாக் ஆப்பை டவுன்லோடு செய்திருந்தார்கள். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 18 கோடியே 8 லட்சம் பேர் டிக்டாக் ஆப்பை பயன்படுத்துவதாக தகவல் வெளியானது.

  தடை செய்ய கோரிக்கை

  தடை செய்ய கோரிக்கை

  இந்நிலையில் டிக்டாக் ஆப்பில் தான் பெண்கள் மற்றும் இளைஞர்கள் எந்த நேரமும் மூழ்கி கிடக்கும் அளவுக்கு அபாயமாக மாறியது. பெண்கள் சர்வசாதாரணமாக ஆபாசமாகவும், ஆண்கள் அவதூறாகவும் மீம்ஸ் வீடியோக்களை வெளியிடுவதாக புகார் எழுந்தது. இதனிடையே டிக் டாக் சமூக சீரழிவு ஏற்படுவதாகவும், டிக்டாக் ஆப்புக்கு அடிமையாகி சிலர் மரணம் அடைந்துள்ளதாகவும் , இளைஞர்களிடம் ஒழுக்கக்கேட்டை உருவாக்கும் இந்த ஆப்புக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  ஐகோர்ட் அதிரடி

  ஐகோர்ட் அதிரடி

  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கும் முன்பே டிக் டாக் போன்ற சமூகத்தை சீரழிக்கும் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பிளே ஸ்டோர்களில் இருந்து டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

  தடைக்கு விலக்கு இல்லை

  தடைக்கு விலக்கு இல்லை

  சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய தடை விதிக்குமாறு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் விசாரணையையும் ஒத்திவைத்தது.

  கூகுள் நீக்கியது.

  கூகுள் நீக்கியது.

  இதன்காரணமாக டிக் டாக் ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள், மற்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது . இதை ஏற்று கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் ஆப்பை நேற்றே நீக்கிவிட்டன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  வடமேற்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
  வருடம்
  வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
  2019
  ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் பாஜக வென்றவர் 8,48,663 60% 5,53,897
  குன்கான் சிங் ஏஏஏபி தோற்றவர் 2,94,766 21% 5,53,897
  2014
  உதித் ராஜ் பாஜக வென்றவர் 6,29,860 47% 1,06,802
  ராக்கி பிர்லா ஏஏஏபி தோற்றவர் 5,23,058 39% 0
  2009
  கிருஷ்ணா தீரத் காங்கிரஸ் வென்றவர் 4,87,404 57% 1,84,433
  மீரா கன்வாரியா பாஜக தோற்றவர் 3,02,971 35% 0

   
   
   
  English summary
  Google and Apple removed Tik Tok from app stores after Indian Ministry of Electronics and Information Technology wrote letter

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more