• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

21வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்.. உருகும் 90ஸ் கிட்ஸ்.. சில சூப்பர் தகவல்கள் இதோ

Google Oneindia Tamil News
  90's memes throw back | சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் கருத்துக்கள் மீம்ஸ்களாக வளம் வருகின்றன

  டெல்லி: உலகின் முன்னணி தேடுபொறியான, கூகுள் இன்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. 90ஸ் கிட்ஸ் தங்கள் ஆரம்பகால இணையதள நாட்களை நினைத்து பார்த்து சமூக வலைத்தளங்களில் உருகிவருகிறார்கள்.

  தனது பிறந்தநாளையொட்டி, கூகுள் ஒரு டூடுல் வெளியிட்டுள்ளது. அந்த டூடுல் படத்தில், 90ஸ்களில் பயன்படுத்தப்பட்ட பெரிய சைஸ் கம்ப்யூட்டர் டேபிள் மீது இருப்பதை போலவும், அதில் கூகுள் என்ற தேடுபொறி காணப்படுவதை போலவும் காட்சி இடம் பெற்றுள்ளது. 98 9 27 என்று அந்த படத்தின் வலது மூலையில் எழுதப்பட்டுள்ளது.

  Google celebrated its 21st birthday with a special doodle

  தனது பிறந்தநாள் தேதியை அது குறிக்கிறது. இந்த படத்தை பார்த்ததும், 90ஸ் கிட்ஸ் பலரும் தங்கள் குழந்தை பருவ காலகட்ட வாழ்க்கையை நினைத்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்த நேரத்தில் கூகுள் குறித்த சில சுவாரசிய தகவல்களை பார்க்கலாம் வாங்க.

  • கூகுள் 1998இல் செர்ஜி பிரின் மற்றும் லேரி (லாரன்ஸ்) பேஜ் ஆகிய இருவரால் நிறுவப்பட்டது.
  • கூகுள் ஒரு ஆராய்ச்சி திட்டமாக 1996ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. அதாவது கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்பு. லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் இந்தத் திட்டத்தைத் தொடங்கினர் என்றும் கூகுளின் நிறுவனர்கள் இவர்கள்தான் எனறும் உலகம் இப்போது சொல்கிறது. ஆனால் அவர்களுடன் அந்த திட்ட குழுவில் மூன்றாவது ஒரு நபரும் இருந்தார். மூவரும் அப்போது பிஎச்டி மாணவர்கள்.
  • மூன்றாவது நபரின் பெயர் ஸ்காட் ஹசன். இந்த ஆராய்ச்சி திட்டத்திற்கான நிஜமான முன்னணி புரோகிராமராக ஸ்காட்தான் இருந்தார்.
  • உண்மையில், கூகுள் ஒரு நிறுவனமாக 1998இல் தொடங்கியது. ஆராய்ச்சி திட்டம் முடிந்ததும், கூகுள் ஒரு நிறுவனமாகத் தொடங்குவதற்கு முன்பே ஸ்காட் அந்த திட்டத்திலிருந்து வெளியேறினார். அவர் ரோபாட்டிக்ஸ் துறையில் தொழில் தொடர விரும்பினார். 2006ல் ஸ்காட் வில்லோ கேரேஜ் என்ற நிறுவனத்தைத் ஸ்காட் தொடங்கினார். எனவேதான் கூகுள் நிறுவர்கள் பெயர்களில் ஸ்காட் பெயர் மிஸ்சாகிவிட்டது.
  • கூகுள் டொமைன் பெயர் 1997ம் ஆண்டு செப்டம்பர் 15ல் பதிவுசெய்யப்பட்டது. நிறுவனமாக 1998ல் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் லேரி பேஜ் மற்றும் செர்ஜ் பிரின் ஆகியோர் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நண்பரின் கேரேஜில் கூகுளின் பணிகளை தொடங்கினர். ஸ்டான்போர்டில் படித்த சக பிஎச்.டி மாணவரான கிரேக் சில்வர்ஸ்டனை அவர்கள் தங்கள் முதல் பணியாளராக நியமித்தனர்.
  • கூகுள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறது என்றாலும், செப்டம்பர் 27 இதற்கு முன்பு அதன் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் அல்ல. 2005ஆம் ஆண்டு வரை இந்த வலைத்தளம் தனது பிறந்த நாளை செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடி வந்தது.. ஆனால் 2005 முதல், செப்டம்பர் 8, செப்டம்பர் 26 என பிறந்த நாளை மாற்றி மாற்றி கொண்டாடிக் கொண்டு இருந்தது. சமீபத்தில்தான் செப்டம்பர் 27 கூகுளின் பிறந்தநாளாக மாற்றப்பட்டது.
  • இன்று, கூகுள் உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்குகிறது, ஒவ்வொரு ஆண்டும் டிரில்லியன் கணக்கான தேடல் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. ஆனால் 90ஸ் கிட்ஸ் தங்களது குழந்தை பருவத்தில் கூகுள் போன்ற ஒரு தேடுபொறியில்லாமல், தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள, நூலகங்களில் புத்தகங்களை தேடி அலைந்த நாட்களை மறக்க முடியாது! இன்றோ, கடவுளுக்கு அடுத்தபடியாக, உலகில் அனைத்தையும் அறிந்து வைத்துள்ளது கூகுள்தான். 90ஸ் கிட்ஸின் பிற்கால வளர்ச்சியில் கூகுள் மற்றும் அதன் பல்வேறு சேவைகள் ஒரு உற்ற தோழனாக மாறிவிட்டது உண்மை.

  English summary
  Google celebrated its 21st birthday with a special doodle today. Google was founded by two Stanford Ph.D. students, Sergey Brin and Lawrence (Larry) Page, 21 years ago in September 1998.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X